இறப்பு எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா? சந்தேகம் எழுப்பும் சுகாதார நிபுணர்கள்!

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மூன்றரை லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இறப்பு எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா? சந்தேகம் எழுப்பும் சுகாதார நிபுணர்கள்!
கொரோனா பாதிப்பு
  • Share this:
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் இதுவரை 3,53,427 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,633 என ரஷ்யா தெரிவித்துள்ளது.

தொற்று எண்ணிக்கையில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில் ரஷ்யாவில் மட்டுமே இறப்பு எண்ணிக்கை 1 சதவீதமாக உள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக ஃபிரான்ஸில் 15.5 சதவீதமாகவும், இத்தாலியில் 14.3 மற்றும் இங்கிலாந்தில் 14.1 சதவீதமாகவும் இறப்பு எண்ணிக்கை உள்ளது.

தொற்று எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 5.9 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்து ரஷ்யா தவறான தரவுகளைக் கொடுத்து வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்ய துணை பிரதமர் டட்டியானா கோலிகோவா (Tatyana Golikova) தாங்கள் அதிகாரபூர்வமான தரவுகளை ஒருபோதும் மாற்றுவதில்லை என்று கூறியுள்ளார்.


Also see...
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading