• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ரஷ்யாவில் இன்று முதல் சம்பளத்துடன் அனைவருக்கும் விடுமுறை - ஏன் தெரியுமா?

ரஷ்யாவில் இன்று முதல் சம்பளத்துடன் அனைவருக்கும் விடுமுறை - ஏன் தெரியுமா?

russia

russia

ரஷ்ய அரசு, கொரோனா புள்ளிவிவரங்களை மறைத்து தவறாக காட்டி வருவதாக Rosstat என்ற புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

  • Share this:
கொரோனா அதிகரிப்பால் ரஷ்யாவில் இன்று முதல் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் தினசரி கொரோனா பாதிப்பு சாதனை அளவை எட்டியிருக்கும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அத்யாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எவற்றிற்காகவும் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் இந்த காலகட்டத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு தரப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக பரவிய நாடுகளுள் ஒன்றாக ரஷ்யாவும் இருந்தது. ஆனால் அதன் பின்னர் தடுப்பூசி தயாரிப்பில் மும்முரம் காட்டிய ரஷ்யா, ஸ்புட்னிக்-வி என்ற செயல்திறன் மிக்க தடுப்பூசியை உருவாக்கி அம்மக்களுக்கு செலுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சமீப காலமாக அங்கு தினசரி பாதிப்பு கடுமையாக அதிகரித்து வந்தது. பாதிப்பும், பலியும் பல மடங்கு அதிகரித்தது, இது ரஷ்ய அரசுக்கு கவலையை ஏற்படுத்தியது.

Also read: மோடியின் வலிமைக்கு காங்கிரஸ் தான் காரணம் – காங்கிரஸை காய்ச்சி எடுத்த மம்தா பானர்ஜி!

ரஷ்யாவில் இன்று ஒரே நாளில் 40,251 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இதனிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இன்று ( அக்டோபர் 30) முதல் நவம்பர் 7ம் தேதி வரை ரஷ்யாவில் முழு அடைப்பு அமல்படுத்தப்படும் என கடந்த வாரம் அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பை அடுத்து முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

இந்த காலகட்டத்தில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுமென ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறை காலத்தில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யர்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது ரஷ்ய அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யாவில் அதிக பாதிப்புக்கு காரணமாக இருப்பது தலைநகர் மாஸ்கோ தான்.

Also read:   1999ல் வாஜ்பாய்க்கு பிறகு… போப் பிரான்சிஸை சந்தித்து பேசிய பிரதமர் மோடி

ரஷ்யாவில் பல மாதங்களாக ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், இதுவரை 32.5 சதவிகித மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பதாக அரசுத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன.

இதனிடையே ரஷ்ய அரசு, கொரோனா புள்ளிவிவரங்களை மறைத்து தவறாக காட்டி வருவதாக Rosstat என்ற புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்திருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரஷ்யாவில் 44,265 பேர் நோய்த்தொற்றால் பலியாகி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்ய அரசு இந்த எண்ணிக்கையில் பாதியை மட்டுமே காட்டியிருக்கிறது. இந்த எண்ணிக்கையின்படி பார்க்கையில் ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4.5 லட்சமாக இருக்கும். ஐரோப்பியாவில் இதுவே அதிகபட்ச உயிர்பலியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: