ரஷ்யாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா; ஒரே நாளில் 24,000 பேர் பாதிப்பு; 725  பேர் பலி

மாஸ்கோ.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,000  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 725  பேர் பலியாகியுள்ளனர்.

 • Share this:
  ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,000  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 725  பேர் பலியாகியுள்ளனர்.

  உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

  இதுவரை உலக அளவில் 18.54 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 40.10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

  இதையும் படித்துப் பாருங்கள்: Corona Variant Lambda  | டெல்டாவை விடவும் பயங்கரமான லாம்ப்டா வகை கொரொனா- மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை
   இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 56,82,634 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 725 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 041 ஆக உயர்ந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ரஷ்யாவில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 20,067 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 51,21,919 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,20,674 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  ஜூலை 7ம் தேதி முதல் அயல் நாட்டிலிருந்து வரும் ரஷ்யர்கள் தங்களை சுய-தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். மூச்சுத்திணறல் உள்ள அனைத்து மூச்சுக்குழல் நோய் உள்ளவர்களும் கோவிட் டெஸ்ட் எடுத்துக் கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  டெல்டா பிளஸ் வேரியண்ட்டும் ஒரு சில இடங்களில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் சுமார் 1,51,000 பேர் கொரோனா சிகிச்சையில் மருத்துவமனையில் உள்ளனர்.
  Published by:Muthukumar
  First published: