முகப்பு /செய்தி /உலகம் / “திறமைசாலிகள்…” - இந்தியர்களை புதின் மீண்டும் புகழ்ந்ததன் பின்னணி இதுதான்!

“திறமைசாலிகள்…” - இந்தியர்களை புதின் மீண்டும் புகழ்ந்ததன் பின்னணி இதுதான்!

பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பிரதமர் மோடியின் நாட்டுப்பற்றையும் வெகுவாக பாராட்டியுள்ள புதின், உலகில் இருக்கும் ஒவ்வொருவரின் கவனத்தையும் இந்தியா ஈர்த்து வருவதாகவும், மோடியின் தலைமையின் கீழ் இந்தியா மேலும் வளர்ச்சியடையும் எனவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • internati, IndiaRussia

இந்தியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனவும், லட்சியவாதிகள் எனவும் ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் புகழாராம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் நட்பு நாடு இந்தியா என்றாலும் இந்தியாவுக்கும் புதினுக்கும் உள்ள நட்புறவு எப்போது சிறப்பு வாய்ந்ததுதான். அதனால்தான் பல்வேறு சமயங்களில் இந்தியாவையும், இந்தியர்களையும் புதின் பாராட்டி பேசி வருகிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்தியா நேரிடையாக தனது எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. அமெரிக்கா என்னதான் நெருக்கடி கொடுத்தாலும் இந்தியா ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு போதும் முன்னெடுத்ததில்லை. அதனால் எப்போதுமே புதினுக்கு இந்தியா மீது தனி பாசம்.

கடந்த 27ஆம் தேதி ஒரு நிகழ்வில் பேசிய புதின், இந்திய பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையை வெகுவாக பாராட்டினார். தனத தேசத்தின் நன்மையைக் கருதி தனித்துவமான வெளியுறவுக்கொள்கையை பின்பற்றும் உலகின் ஒரு சில தலைவர்களில் மோடியும்  ஒருவர் என புதின் பாராட்டியிருந்தார். மோடியின் தலைமையின் கீழ் இந்தியா அண்மைக்காலமாக பல்வேறு சாதனைகளை புரிந்திருப்பதாகவும் புதின் பாராட்டி பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியர்களை பாராட்டிப் பேசியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ரஷ்ய ஒற்றுமை தின விழாவில் புதின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியர்கள் மிகவும் திறமையானவர்கள் எனவும், லட்சியத்தை வகுத்துக்கொண்டு அதை நோக்கி தொடர்ந்து பயணித்து வெற்றி பெறுபவர்கள் எனவும் பேசியுள்ளார்.

கிட்டத்தட்ட 150 கோடி மக்கள் தொகை என்பது இந்தியாவின் மிகப்பெரிய சக்தி எனக்குறிப்பிட்டுள்ள புதின், தேச வளர்ச்சியில் இந்தியா விரைவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும்.. அதில் சந்தேகமில்லை எனக் குறிப்பிட்டுள்ள புதின், பிரதமர் மோடியின் நாட்டுப்பற்றையும் வெகுவாக பாராட்டியுள்ள புதின், உலகில் இருக்கும் ஒவ்வொருவரின் கவனத்தையும் இந்தியா ஈர்த்து வருவதாகவும், மோடியின் தலைமையின் கீழ் இந்தியா மேலும் வளர்ச்சியடையும் எனவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு மிக வளமான எதிர்காலம் காத்திருக்கிறது எனவும் புதின் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்தவேண்டும்...” - போப் பிரான்சிஸ் மீண்டும் வலியுறுத்தல்!

இந்தியாவும் ரஷ்யாவும் மிக ஆழமான நட்புணர்வால் பிணைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட புதின், இரு நாடுகளும் எப்போதும் ஒன்றுக்கொன்று ஆதரவாகவே செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய-உக்ரைன் போரின் போதும், இந்தியாவுக்கு எரிபொருள் வழங்க ரஷ்யா முன்வந்தது உலக நாடுகள் பலவற்றின், குறிப்பாக அமெரிக்காவை புருவங்களை உயர்த்த வைத்தது. ஆனாலும், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்படும் எந்த முடிவையும் பிரதமர் மோடி முன்னெடுக்கவில்லை. அதன் பிரதிபலன் தான் இந்த புகழாரம் என அரசியல் நோக்கர்கள் தங்கள் கருத்தை முன்வைக்கிறார்கள்

செய்தியாளர் : ரொசாரியோ ராய்

First published:

Tags: Vladimir Putin