Home /News /international /

ரஷ்ய அதிபர் புடின் ரத்த புற்றுநோயால் பாதிப்பு? ஆட்சி கவிழ்ப்புக்கும் திட்டம் என தகவல்

ரஷ்ய அதிபர் புடின் ரத்த புற்றுநோயால் பாதிப்பு? ஆட்சி கவிழ்ப்புக்கும் திட்டம் என தகவல்

விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின்

புடின் தரப்புக்கு நெருக்கமான செல்வந்தர் ஒருவர், புடின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல்,  உக்ரைன் நாட்டின் தளபதி கைர்யலோ புட்னவோ தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு  அளித்துள்ள பேட்டியில், புடின் ஆட்சியை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும் ...
    ரஷ்ய அதிபர் விளாடிமீர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் வெளிவரும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ரஷ்யாவின் அதிபராக உள்ள விளாடிமிர் புடின் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவது உண்டு.  ‘புடின் இறந்துவிட்டார், தற்போது பதவியில் உள்ளது அவரது போலி ’ என்றுகூட கூறப்பட்டது உண்டு.இதேபோல், புடின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதன்படி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 80 நாட்கள் நெருங்கியுள்ளது. இதில், இரு தரப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடையை விதித்துள்ளது. இந்நிலையில், அதிபர் புடின் கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்படுவதாகவும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பிரிட்டன் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீல் ஸ்கை நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ரஷ்யா மற்றும் பிறபகுதிகளில் இருந்து வரும் தகவல்படி புடின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.

    இதையும் படிக்க: ரஷ்ய அதிபர் புதின் ஆட்சி கவிழ்க்கப்படும் - உக்ரைன் ராணுவ தளபதி ஆருடம்


    இதனிடையே புடின் தரப்புக்கு நெருக்கமான செல்வந்தர் ஒருவர், புடின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல்,  உக்ரைன் நாட்டின் தளபதி கைர்யலோ புட்னவோ தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு  அளித்துள்ள பேட்டியில், புடின் ஆட்சியை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

    மேலும் படிக்க: இந்த பெண் கண்ணீர் விட்டு அழவும் முடியாது, குளிக்கவும் முடியாது - காரணம் என்ன?


    ’போரில் ரஷ்யா தோற்கும் பட்சத்தில், புதின் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவரது ஆட்சி தூக்கி வீசப்படும். ரஷ்யாவில் புதிய தலைமைக்கான சூழல் உருவாகும். இதற்கான வேலைகள் தற்போதே தொடங்கியுள்ளது. ஆட்சி மாற்றம் என்பதை தடுக்க முடியாது’ என அவர் கூறியுள்ளார். புடின் தொடர்பான இந்த தகவல்களுக்கு இதுவரை ரஷ்ய தரப்பில்  இருந்து மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Russia, Russia - Ukraine, Vladimir Putin

    அடுத்த செய்தி