Home /News /international /

ரஷ்ய அதிபரிடமிருந்து ஜூடோ அமைப்பின் கவுரவ தலைவர் பதவி பறிப்பு

ரஷ்ய அதிபரிடமிருந்து ஜூடோ அமைப்பின் கவுரவ தலைவர் பதவி பறிப்பு

விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின்

2014-ம் ஆண்டு ஜூடோ கலையில் உச்சபட்ச பட்டத்தை புதின் பெற்றார். விளையாட்டு உலகில் இந்தப் பட்டம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மதிக்கப்படுகிறது. அதே ஆண்டில் ஜூடோவின் தூதராக புதின் பாராட்டப்பெற்றார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சர்வதேச ஜூடோ தற்காப்புக்கலை அமைப்பின் கவுரவ தலைவர் பதவி, ரஷ்ய அதிபரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்பு அந்நாட்டின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யில் முக்கிய பொறுப்பை வகித்தவர். தற்காப்பு கலையிலும் வல்லவரான அவர் சர்வதேச ஜூடோ அமைப்பின் கவுரவ தலைவராக இருந்து வந்தார். இதற்கிடையே, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

தற்போதும் ஐநா உள்பட பல்வேறு நாடுகள் ரஷ்யாவின் செயல்பாட்டை கண்டித்து வருகின்றன. இருப்பினும் விடாப்பிடியாக உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. கடைசியாக வந்த தகவலின்படி 3 குழந்தைகள் உள்பட 198 உக்ரைன் மக்கள் ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க - அதிகரிக்கும் ரஷ்ய தாக்குதல்: உக்ரைனில் பதுங்கு குழிகளில் உணவின்றி பதுங்கி தவிக்கும் இந்திய மாணவர்கள்!

ரஷ்யாவின் ஆதிக்கப் போக்கை கண்டிக்கும் விதமாக அந்நாட்டு அரசு ஊடகங்களின் கணக்குகளை சமூக வலைதளமான ஃபேஸ்புக் முடக்கியுள்ளது. ரஷ்யா மீது தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இவ்வாறு சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு சிறிது சிறிதாக நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச ஜூடோ அமைப்பின் கவுரவ தலைவர் பொறுப்பில் இருந்து ரஷ்ய அதிபர் புதின் நீக்கப்படுவதாக அதன் நிர்வாகக்குழு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க - உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை புரிந்து கொள்வது எப்படி?

2014-ம் ஆண்டு ஜூடோ கலையில் உச்சபட்ச பட்டத்தை புதின் பெற்றார். விளையாட்டு உலகில் இந்தப் பட்டம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மதிக்கப்படுகிறது. அதே ஆண்டில் ஜூடோவின் தூதராக புதின் பாராட்டப்பெற்றார்.

இதற்கிடையே உக்ரைனின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனின் 975 ராணுவத்தளங்களை அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 471 உக்ரைன் ராணுவத்தினரை கைது செய்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி