Home /News /international /

மிகப்பெரிய போருக்கு ரஷ்யா திட்டமிட்டு வருகிறது: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் விமர்சனம்

மிகப்பெரிய போருக்கு ரஷ்யா திட்டமிட்டு வருகிறது: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் விமர்சனம்

ரஷ்யா- உக்ரைன் விவகாரம்

ரஷ்யா- உக்ரைன் விவகாரம்

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை தடுத்து நிறுத்தவில்லை என்றால் அண்டை நாடுகள் மீதும் புடின் படையெடுப்பார் என்று இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர்  Liz Truss கூறியுள்ளார். 

    1945ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பியாவில் மிகப்பெரிய போருக்கு ரஷ்யா திட்டமிட்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் விமர்சித்துள்ளார்.

    ஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், அண்மையில் ரஷ்யா போர் பயிற்சி மேற்கொண்டது. மேலும், உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்ததால், போர் பதற்றம் உருவானது. இந்த விவகாரத்தில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டதால் ஒருசில படைகளை திரும்ப பெற்றதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    எனினும், உக்ரைன் எல்லைப்பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல், ஒரு லட்சத்து 90 ஆயிரம் வீரர்களை ரஷ்யா தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. எப்போதுவேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.

    இந்நிலையில், பிபிசி ஊடகத்திற்கு பேட்டி அளித்த இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன், 1945ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பியாவில் மிகப்பெரிய போருக்கு ரஷ்யா திட்டமிட்டு வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதைதான் அனைத்து அறிகுறிகளும் காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: உக்ரைன் மீது இன்னும் சில நாட்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்: அமெரிக்க அதிபர் எச்சரிக்கை


    உக்ரைன் தலைநகர் கியேவை சுற்றி வளைக்கும் படையெடுப்பை ரஷ்யா நடத்த உத்தேசித்துள்ளதாக உளவுத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோல், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை தடுத்து நிறுத்தவில்லை என்றால் அண்டை நாடுகள் மீதும் புடின் படையெடுப்பார் என்று இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர்  Liz Truss கூறியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Boris johnson, Russia, Russia - Ukraine, Vladimir Putin

    அடுத்த செய்தி