அமெரிக்காவின் டிக் டாக் தடை முடிவு: எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா

அமெரிக்காவின் டிக் டாக் தடைக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் டிக் டாக் தடை முடிவு: எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா
கோப்புப்படம்
  • Share this:
டிக்டாக்கை தடை செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் நியாயமற்ற பொருளாதார போட்டிக்கான அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டு என ரஷ்யா கூறியுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஸகரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக இருக்கின்றன என்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுவதாகவும் கூறியுள்ளார்.

Also read: சென்னை மணலியில் சேமிக்கப்பட்ட 43 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் எங்கே? சுங்கத்துறை அதிகாரிகளின் விளக்கம் என்ன?


சர்வதேச சமூக வலைத்தளங்களில் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் இத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய ரஷ்யா வலியுறுத்தும் என்றும் மரியா ஸகரோவா கூறியுள்ளார்.
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading