Home /News /international /

"ரஷ்யா உலகம்" புதிய வெளியுறவுக் கொள்கைக்கு புதின் ஒப்புதல் - இந்தியா உடனான உறவை வலுப்படுத்த முடிவு!

"ரஷ்யா உலகம்" புதிய வெளியுறவுக் கொள்கைக்கு புதின் ஒப்புதல் - இந்தியா உடனான உறவை வலுப்படுத்த முடிவு!

ரஷ்யாவின் புதிய வெளியுறவுக் கொள்கை

ரஷ்யாவின் புதிய வெளியுறவுக் கொள்கை

Russia World : ரஷ்யா உலகம் என்ற கருத்தைக் கொண்டு புதிய வெளியுறவுக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international, IndiaRussia Russia
    "ரஷ்யா உலகம்" என்று ரஷ்யா மொழி பேசுபவர்களுக்கு ஆதரவாக உள்ள ரஷ்யாவின் புதிய வெளியுறவுக் கொள்கைக்குத் திங்கள்கிழமை அன்று ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

    கடந்த ஆறு மாதங்களாக ரஷ்யா, உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த புதிய வெளியுறவுக் கொள்கை ரஷ்யா உலகம் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. 31 பக்கங்களுடன் மனிதாபிமான கொள்கை என்று குறிப்பிட்டுள்ள அந்த கொள்கையில் ரஷ்ய உலகின் மரபுகள் மற்றும் இலட்சியங்களை ரஷ்யா பாதுகாக்க வேண்டும் என்று இடம்பெற்றுள்ளது.

    மேலும் வெளிநாடுகளில் வாழும் ரஷ்யா மக்கள் உரிமைகள், கருத்துக்களைப் பாதுகாக்கும் வண்ணம் கொள்கையுள்ளது. இதனைத்தொடர்ந்து உலக நாடுகளுடன் உள்ள உறவை வலுப்படுத்தும் கொள்கைகளும் இடம்பெற்றிருந்தது. அதில் ஸ்லாவிக் நாடுகள், இந்தியா மற்றும் சீனா உடனான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவை மேலும் வலுப்படுத்தவும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Also Read : கனடாவில் கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரி கத்திகுத்து தாக்குதல் - 10 பேர் பலி, 15 படுகாயம்

    1991இல் சோவியத் யூனியன் உடைத்தபோது 25 மில்லியன் ரஷ்யா மக்கள் புதிதாய் உருவாக்கிய நாடுகளுடன் சேர்ந்தனர். இவர்களின் உரிமைகளை இந்த புதிய கொள்கை காப்பதாக அமைத்துள்ளது.
    மேலும் 2008இல் ஜார்ஜியன் பகுதியிலிருந்து பிரிந்த அப்காசியா மற்றும் ஒசேஷியா என்ற இருநாடுகளை ரஷ்யா அங்கீகரிப்பதாகக் கூறியிருந்தது. இந்த புதிய கொள்கையில் அந்த நாடுகளுடன் உறவை மேம்படுத்த உள்ளனர்.

    அதே போல் மேற்கு உக்ரைனிடம் இருந்து ரஷ்யாவால் கைப்பற்றி சுதந்தர இடங்களாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுடனும் உறவை மேம்படுத்தும் கொள்கைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Russia, Vladimir Putin

    அடுத்த செய்தி