Home /News /international /

ரஷ்ய ராணுவ வாகனங்களில் பயன்படுத்தப்படும் Z குறியீடு - அதன் பின்னணி என்ன?

ரஷ்ய ராணுவ வாகனங்களில் பயன்படுத்தப்படும் Z குறியீடு - அதன் பின்னணி என்ன?

ரஷ்யா ராணுவ வாகனம்

ரஷ்யா ராணுவ வாகனம்

ரஷ்யா- உக்ரைன் போர் வலுப்பெற்று வரும் சூழலில் ரஷ்யாவின் ராணுவ வாகனங்களில் பயன்படுத்தப்படும் “Z” என்ற குறியீடின் பொருள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

    உக்ரைன் படையெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரஷ்ய ராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்களில் “Z” என்ற அடையாளம் அதிக கவனம் ஈர்த்து வருகிறது. இந்த “z” என்ற குறியீடு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகிய நிலையில் இதற்கு பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படுகின்றன.

    ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் உக்ரைன் நாட்டின் அதிபர் செலன்ஸ்கியின் முதல் எழுத்தை குறிக்கும் வார்த்தை என்பது உள்பட பல கதைகள் உலாவி வருகின்றன. அதேநேரம் “Z” என்ற வார்த்தையை சிலர் ”za pobedy” என்பதன் குறியீடு என்கிறார்கள். அதற்கு ரஷ்ய மொழியில் வெற்றி என அர்த்தம்.

    வேறு சிலர் ரஷ்ய மொழியில் மேற்கு என்பதை குறிக்கும் ”zapad” என்பதன் சுருக்கமே Z என கூறுபவர்களும் உண்டு. உக்ரைனின் மேற்கு பகுதியை கைப்பற்ற முனைப்பு காட்டுவதன் அடையாளமாக இது உள்ளது என ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் மறுத்துள்ள ரஷ்யா ராணுவ தரப்பு உக்ரைனுக்குள் போர் நடைபெறும் சூழலில் தங்கள் வாகனங்களை அடையாளம் காணும் வகையில் சாதாரணமாக “Z” என்ற குறியீடு பயன்படுத்தப்படுவதாக கூறுகிறது.

    போர் காரணமாக உக்ரைனிலிருந்து 20 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்: ஐ.நாவின் அகதிகள் ஆணையம் தகவல்

    முதன் முதல் ரஷ்யா தன் படைகளை உக்ரைன் எல்லையில் குவித்தபோது தான் அதன் வாகனங்களில் இந்த “Z” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு ரஷ்யர்கள் பலரும் இதனை தங்கள் கார், வீடு உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுத்தினர். அண்மையில் ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரர் Ivan Kuliak இந்த குறியீட்டுடன் ஆடை அணிந்திருந்தார். உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷ்யா மீதான தேசப்பற்று கொண்டவர்களின் அடையாளமாகவே திகழ ஆரம்பித்துவிட்டது இந்த Z குறியீடு.
    Published by:Karthick S
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி