ஹோம் /நியூஸ் /உலகம் /

உக்ரைன் மீது ஒரே நாளில் 36 ராக்கெட்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருளில் மூழ்கியது!

உக்ரைன் மீது ஒரே நாளில் 36 ராக்கெட்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருளில் மூழ்கியது!

உக்ரைன் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல்

உக்ரைனின் 36 இடங்களில் ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaKyivKyivKyiv

  ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜ்யா ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அப்பகுதியில் உக்ரைன் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறியுள்ள ரஷ்யா, அங்குள்ள மக்கள் வெளியேற வேண்டும் என தெரிவித்தது.

  இந்நிலையில், நோவா ககோவ்கா அணையை தகர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். உக்ரைனின் 36 இடங்களில் ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் உறுதிபடுத்தியுள்ளார்.

  "உக்ரைனை அச்சுறுத்தும் நோக்கில் எதிரிகள் 36 ராக்கெட்டுகள் வீசி முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குல் நடத்தியுள்ளது. இது தேவையற்ற பீதியை கிளப்பும் யுக்தியாகும்" என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் காரணமாக உக்ரைனின் முக்கிய நகரங்களில் வசிக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பம் இருளில் மூழ்கியுள்ளது. ரஷ்ய தாக்குதலின் எதிரொலியாக, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இதையும் படிங்க: மூன்றாம் முறை அதிபராகும் ஜி ஜின்பிங்? - சீனா அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிரடி திருத்தம்!

  இதனிடையே, உக்ரைனில் சாலையில் மிகவும் தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர் குறித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைப்பு ‘உக்ரைனுக்கு வரவேற்கிறோம்’ என்ற பதிவுடன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காகவே, இதுபோன்று தாழ்வாக பறந்திருக்கலாம் என்று நியூஸ்வீக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Russia, Russia - Ukraine, Vladimir Putin