ஹோம் /நியூஸ் /உலகம் /

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து 40 லட்சம் பேர் வெளியேற்றம்... ஐ.நா. தகவல்

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து 40 லட்சம் பேர் வெளியேற்றம்... ஐ.நா. தகவல்

நாள் ஒன்றுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் வரையில் உக்ரைனில் இருந்து வெளியேறி வருவதாக ஐநா கூறியுள்ளது.

நாள் ஒன்றுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் வரையில் உக்ரைனில் இருந்து வெளியேறி வருவதாக ஐநா கூறியுள்ளது.

நாள் ஒன்றுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் வரையில் உக்ரைனில் இருந்து வெளியேறி வருவதாக ஐநா கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து 40 லட்சம் பேர் வரை வெளியேறி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதாக ஐநா கவலையுடன் கூறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போரை நடத்தும் என கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 24-ம்தேதி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கின. இதற்கு முன்பு இருந்தே ரஷ்யா எல்லையை ஒட்டியுள்ள மக்கள் வெளியேறத் தொடங்கி விட்டனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், உக்ரைன் தற்போது ஒவ்வொரு பகுதிகளாக இழந்து வருகிறது. உக்ரைனில் இருந்து வரும் தகவலின்படி, ரஷ்ய படைகள் உக்ரைனை விட அதிக இழப்பை சந்தித்துள்ளன. இருப்பினும் இதுகுறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க - இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்த நிலையில் போர் காரணமாக உக்ரைனை சேர்ந்த சுமார் 40 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் வரையில் உக்ரைனில் இருந்து வெளியேறி வருவதாக ஐநா கூறியுள்ளது.

இதுதொடர்பாக ஐநா செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இதுவரை இல்லாத அளவில் உக்ரைனில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். அவர்களுக்கு போதுமான உதவிகளை ஐநா செய்து வருகிறது. உக்ரைன் எல்லையில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் காத்துக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு அதிக உதவி தேவைப்படுகிறது. அவர்கள் நம்பிக்கையற்று காணப்படுகிறார்கள்.

இதையும் படிங்க - அரசு ஊழியர்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும் - தாலிபான்கள் உத்தரவு

ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. சமாதானத்தை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஐநா மேற்கொண்டு வருகிறது.' என்று தெரிவித்தார்.

First published:

Tags: Russia - Ukraine, UNO