செவ்வாயன்று, ரஷ்ய நீதிமன்றம் அதன் அண்டை நாடான உக்ரைன் மீதான தாக்குதல் பற்றிய கட்டுரைககளை நீக்காததற்கு விக்கிப்பீடியாவின் உரிமையாளருக்கு இரண்டு மில்லியன் ரூபிள் (சுமார் 26,96,655 ரூபாய் ) அபராதம் விதித்தது.
உக்ரைனில் ரஷ்ய இராணுவ ஊடுருவல் பற்றி ரஷ்ய விக்கிப்பீடியா இரண்டு பதிவுகளை வெளியிட்டிருந்தது. அது உண்மையற்றது என்று கூறி ரஷ்ய அரசு அதை நீக்க கோரியது. ஆனால் விக்கிபீடியா நிறுவனம் அதை நீக்க மறுத்துள்ளது. அதற்காக மாஸ்கோவின் டகன்ச்கய் மாவட்ட நீதிமன்றம் விக்கிபீடியா மீது 27 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இந்த குறித்து மாஸ்கோவை தளமாகக் கொண்ட விக்கிமீடியா-ரஷ்யாவின் இயக்குனர் விளாடிமிர் மெடிகோகூறுகையில், கட்டுரைகள் அகற்றப்படாது மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: எல்லையில் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் நிறுத்திவைப்பு : உலகப்போராக உருமாறுகிறதா உக்ரைன்- ரஷ்யா போர்?
விக்கிபீடியா அறக்கட்டளையின் ரஷ்யத் தலைவர் ஸ்டானிஸ்லாவ் கோஸ்லோவ்ஸ்கி, "எங்களிடம் இன்னும் வலுவான சட்ட நடைமுறை நிலை உள்ளது. எனவே இந்த அபராதம் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்ட அபராதம் இரண்டையும் முறியடிப்போம்" என்றார்.
ஏப்ரலில், இதேபோன்ற பல மீறல்களுக்காக ரஷ்ய அதிகாரிகள் விக்கிப்பீடியா அமைப்புக்கு சுமார் 5 மில்லியன் ரூபிள்( இந்திய மதிப்பில் 67 லட்சம் ரூபாய் ) அபராதம் விதித்தனர்.
இது மட்டும் இன்றி ரஷ்ய அதிகாரிகள் கூகுள் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் உக்ரைன் தொடர்பான உள்ளடக்கம் பகிரப்பட்டதை எதிர்த்து அந்நிறுவனங்கள் மீதும் பெரும் அபராதம் விதித்துள்ளனர். ஜூலை மாதம், மாஸ்கோ நீதிமன்றம், உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவத் தலையீடு தொடர்பான உள்ளடக்கத்தை அகற்றத் தவறியதற்காக கூகுளுக்கு 21 பில்லியன் ரூபிள் (சுமார் 2.83 கோடி ) அபராதம் விதித்தது.
இதையும் படிங்க: 85 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த அமெரிக்க பயணியின் கேமராக்கள்.. புதைந்திருக்கும் பொக்கிஷம்
பிப்ரவரி 24 அன்றுஉக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுருவல் ரஷ்ய நாட்டில் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த வழிவகுத்தது. இது நாட்டின் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறையையும் அதிகப்படுத்தியது. இதன் காரணமாக பல ரஷ்ய சுதந்திர பத்திரிகையாளர்களின் வெளியேற்றத்திற்கு வித்திட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Russia - Ukraine, Wikipedia