ஹோம் /நியூஸ் /உலகம் /

உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ரஷ்ய வீரர்களுக்கு வயாகரா.. ஐ.நா. அதிர்ச்சி தகவல்

உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ரஷ்ய வீரர்களுக்கு வயாகரா.. ஐ.நா. அதிர்ச்சி தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

Russia ukraine | பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், சிறுமிகள் மட்டும் அல்ல, ஆண்களும் சிறுவர்களும் கூட.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, Indiarussiarussiarussia

  உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கப்படுவதாக ஐ.நா. பிரதிநிதி பிரமிளா பேட்டன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தனது தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இரு நாட்டிலும் பல உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகள் செய்து வருகின்றன. இதனால், ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இதனையடுத்து, உக்ரைனுக்கு எதிரான போருக்கு தேவையான படைகளை திரட்ட ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார்.

  இந்த நிலையில், இரு நாடுகளிடையே நடக்கும் போரில் பாலியல் வன்முறை தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை, ஐ.நா. பிரதிநிதி பிரமிளா பேட்டன் கூறியுள்ளார். செப்டம்பர் மாதம் கடைசியில் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையை குறிப்பிட்ட அவர், போர் தொடங்கியதில் இருந்து 100க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  ALSO READ | வெள்ளத்தால் சாகும் நைஜீரியா மக்கள்.. 600-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - பசியால் ஏற்பட இருக்கும் அடுத்த அபாயம்

  பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், சிறுமிகள் மட்டும் அல்ல, ஆண்களும் சிறுவர்களும் கூட என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும், பெண்கள் பல நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு வன்கொடுமை செய்யப்படுவதாக தெரிவித்த அவர், தொடர் பிறப்புறுப்பு சிதைவுகளை பார்க்கும் போது ரஷ்ய வீரர்கள் வயாகராவை பயன்படுத்துவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியளித்துள்ளதாக தெரிவித்தார்.

  பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சாட்சியங்களின் படி, பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வயது 4 முதல் 82 வயது வரை இருக்கும் என தெரிவித்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Russia, Russia - Ukraine, UN, UN council member