இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்தது. எல்லைப்பகுதியில் தொடங்கிய போர் படிப்படியாக முக்கிய நகரங்கள் மீது நகர்ந்தது. கடந்த வார இறுதியில் ரஷ்யா இதுவரை இல்லாத தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கிவ்வை பிடிக்க பல ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன. இங்குள்ள பல முக்கிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி அந்த பகுதிகளில் மின்சாரம், தண்ணீர், அடிப்படை வசதிகளை இழந்துவிட்டது. அதை மீட்டுக்கொண்டு இருக்கும்போது மீண்டும் ஒரு சக்திவாய்ந்த தாக்குதலுக்கு உக்ரைன் உள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. கடந்த 10 மாதங்களில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிக இல்லாத அளவு பெரியது மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கனரக வாகனங்கள், நவீன ஏவுகணைகள்..! சீன அச்சுறுத்தலால் ராணுவத்தை வலுப்படுத்தும் ஜப்பான்..!
உக்ரைன் நாட்டின் இரண்டாம் பெரிய நகரமான க்ரீவி, கெர்சான் நகரங்களில் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் 76 ஏவுகணைகளில் 60 சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ராணுவத் தலைவர் கூறினார் .வான் பாதுகாப்பை திசை திருப்பும் வகையில் உக்ரைன் அருகே போர் விமானங்களை பறக்கவிட்டு ரஷ்யா இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.
மத்திய க்ரிவி ரிஹில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் தெற்கில் கெர்சனில் ஷெல் தாக்குதலில் மற்றொருவர் இறந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனில் நிறுவப்பட்ட ரஷ்ய அதிகாரிகள் உக்ரைன் ஷெல் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் 9 மின் உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கத்திய நட்பு நாடுகள் தங்களுக்கு சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுகொண்டார்.
மின்சாரம் மற்றும் அடிப்படை உணவு வசதிகளை 40 % வரை மீட்டெடுத்த மக்கள் மீண்டும் இப்போது ஒரு பெரும் சேதத்தை சந்தித்துள்ளனர். உக்காரனின் முக்கிய நகரங்கள் பல இந்த 1 வருட தாக்குதலில் பெரிதளவு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Russia, Russia - Ukraine