Home /News /international /

போருக்குப் பின் 100 நாள்களில் எண்ணெய் விற்பனை செய்து ரஷ்யா ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா?

போருக்குப் பின் 100 நாள்களில் எண்ணெய் விற்பனை செய்து ரஷ்யா ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா?

சர்வதேச நாடுகளுக்கு ரஷ்யா எண்ணெய் விற்பனை

சர்வதேச நாடுகளுக்கு ரஷ்யா எண்ணெய் விற்பனை

Russia | 100 நாள் காலகட்டத்தில் அதிகபட்சமாக ரஷ்யாவிடம் இருந்து சீனா 12.6 பில்லியன் யூரோவுக்கு இறக்குமதி செய்துள்ளது.

    கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததது. அதன் பின்னர் 100 நாள்களில் மட்டும் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்து ரஷ்யா சுமார் 98 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இது இந்திய மதிப்பில் 7.6 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

    இந்த தகவலை பின்லாந்தை சேர்ந்த CREA என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த எண்ணெய் விற்பனையில் 61 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செய்யப்பட்டுள்ளதும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு 60 பில்லியன் டாலராகும். ரஷ்யா கச்சா எண்ணெய், எரிவாயு குழாய், LNG எரிவாயு உள்ளிட்டவற்றை சர்வதேச நாடுகளில் விற்பனை செய்துள்ளது.

    இந்த 100 நாள் காலகட்டத்தில் அதிகபட்சமாக ரஷ்யாவிடம் இருந்து சீனா 12.6 பில்லியன் யூரோவுக்கு இறக்குமதி செய்துள்ளது. அடுத்தபடியாக, ஜெர்மனி 12.1 பில்லியன் யூரோவுக்கும், இத்தாலி 7.8 பில்லியன் யூரோவுக்கும் இறக்குமதி செய்துள்ளன.

    ஜெர்மனி மற்றும் இத்தாலி ஐரோப்பிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் தெரிவித்து வந்தன.

    இதையும் படிங்க: நபிகள் குறித்த சர்ச்சை கருத்து.. போராட்டம் நடத்தியவர்களை நாடு கடத்தும் குவைத் அரசு

    அதேவேளை, இந்திய தரப்போ ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை அரசியலாக்க வேண்டாம் என பதில் அளித்தது. மேலும், ஐரோப்பிய நாடுகள் தான் ரஷ்யாவிடம் தொடர்ந்து அதிக இறக்குமதியை மேற்கொள்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது வெளியான CREA அறிக்கை தகவல் தெரிவிக்கின்றன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Export, Russia

    அடுத்த செய்தி