Home /News /international /

ரஷ்யா தாக்குதல் அச்சம்... உக்ரைனில் இருந்து உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை கெடு

ரஷ்யா தாக்குதல் அச்சம்... உக்ரைனில் இருந்து உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை கெடு

ரஷ்ய படைகள்

ரஷ்ய படைகள்

உக்ரைன் நாட்டில் ரஷ்யா எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் அங்குள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. சோவியத் யூனியனில் அங்கம் வைத்த உக்ரைன் நாட்டில், மக்கள் பேசும் மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை ரஷ்யாவை ஒத்துப் போகும்.

ஆனால், எல்லை பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை அளித்து வருகிறது. இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புகள் உக்ரைன் அருகே குவிக்கப்பட்டுள்ளதாகவும் எப்போது வேண்டுமானாலும் இந்த துருப்புகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ள வெள்ளை மாளிகை தங்கள் நாட்டு மக்களை 48 மணி நேரத்துக்குள் வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பேராசிரியர்கள், ஆப்கன் நலன்கருதி நாடு திரும்ப வேண்டும்' - தலிபான்கள் கோரிக்கை


சீனாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடர் பிப்ரவரி 20ம் தேதி நிறைவுபெறுகிறது. அதற்கு முன்னதாகவே கூட ரஷ்யா தாக்குதலை தொடங்கக்கூடும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  ‘உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடர்ந்தால், அது வான்வழி குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல்களுடன் தொடங்கும். இதனால் பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

இந்த போர் சூழலுக்கு இடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, உக்ரைனின் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை ரஷ்ய துருப்புகள் சூழ்ந்துள்ளன. போர் சூழலை மேலும் பதற்றமடைய செய்யும்வகையில் போர் ஒத்திகையில் ரஷ்யா ஈடுபடவுள்ளது.
Published by:Murugesh M
First published:

Tags: America, Russia, Russia - Ukraine

அடுத்த செய்தி