உக்ரைனின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
உக்ரைனின் 975 ராணுவத்தளங்களை அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 471 உக்ரைன் ராணுவத்தினரை கைது செய்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் நுழைந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதே போல் உக்ரைனும் ரஷ்யாவின் 30 விமானங்கள், 11 ஹெலிகாப்டர்கள் ஆகிய ராணுவ விமானங்களை அழித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 4-வது நாளாக உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைன் அரசை ரஷ்யா பெலாரஷ்யவுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் உக்ரைன் அரசு அதனை ஏற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைனின் தலைநகர் கீவ்வில் தாக்குதல் நடந்து வருவதால் ஏற்கனவே அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நேரம் இரவு 10 மணியில் இருந்து காலை 7 மணி வரை இருந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உயிரை துச்சமென கருதி சரணடைய மறுத்த 13 உக்ரைன் வீரர்கள்.. ரஷ்ய படையினரால் சுட்டுக் கொலை!
உக்ரைன் மீது ரஷ்யா ஆக்ரோஷ தாக்குதல் நடத்துவதால் மக்கள் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் உயிர் தப்பிக்க உக்ரைனில் இருந்து வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், ரஷ்யப் படைகள் பீரங்கி மற்றும் கப்பல் ஏவுகணைகள் மூலம் உக்ரேன் நகரங்களைத் தாக்குகின்றன. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகருக்குள் அவர்களது படைகள் நுழைந்தை தொடர்ந்து, தற்போது உக்ரைனில் நோவா, ககோவ்கா உள்பட இரு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. மேலும், தெற்கு மற்றும் தென் கிழக்கில் தொடர்ந்து, ரஷ்ய படைகள் முன்னேறி வருவதால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.