ஹோம் /நியூஸ் /உலகம் /

கட்டிமுடித்து 2 வருடம் கழித்து திறக்கப்பட்ட ரஷ்யா -சீனா பாலம்!

கட்டிமுடித்து 2 வருடம் கழித்து திறக்கப்பட்ட ரஷ்யா -சீனா பாலம்!

ரஷ்ய-சீனா பாலம்

ரஷ்ய-சீனா பாலம்

ரஷ்யாவின் பிலகோவேஷிசேன்ஸ்க் (Blagoveshchensk ) நகரத்தையும் சீனாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஹெய்ஹீ (Heihe ) நகரத்தையும் இணைக்கும் படியாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலக அரங்கில் முன்னிலை பெற போட்டியிடும் நாடுகளாக பார்க்கப்படுவது ரஷியா மற்றும் அமெரிக்கா. இவ்விரு நாடுகளில் உலகை யார் ஆள்வது என்ற போட்டி இரண்டாம் உலகப் போர் தொட்டு பனிப்போராக நடந்து வருகிறது. இரண்டு நாடுகளும் தங்கள் பலத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றன. தங்கள் அண்டை நாடுகளின் நட்புறவு, அண்டை நாடுகளை தங்கள் வசம் இழுக்கும் முயற்சியில் உள்ளது. ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் அமெரிக்கா தலைமை கொள்ளும் நாட்டோ படையில் சேர எண்ணியதால் ரஷியா இதைத்தடுக்க உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது.

இப்போது உலக அரங்கில் ரஷ்யாவிற்கு மற்ற நாடுகளின் ஆதரவு குறைந்து வரும் நிலையில் ஆசியாவின் பெரிய மற்றும் சக்திவாய்ந்த நாடாக விளங்கி வரும் சீனாவின் நட்பைப் பெற ரஷ்யா முயற்சித்து வருகிறது. எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்பது போல் அமெரிக்காவை வென்று தனி தலைமையாக வேண்டும் என்று எண்ணி வளரும் நாடு சீனா. இருவருக்கும் பொதுவான எதிரி அமெரிக்க என்பதாலோ ஏனோ இரண்டு நாடுகளும் நட்புறவாட சம்மதித்து வருகிறது.

ரஷ்ய- சீனா நாடுகளுக்கு இடையே ஆமூர் என்ற நதி ஓடுகிறது. அதன் குறுக்கே ஒரு பாலம் அமைத்தால் இரண்டு நாடுகளுக்கும் இடையே விரைவான மற்றும் சிறந்த போக்குவரத்து நிலவும் என்ற எண்ணத்தில்2014 இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி $328 மில்லியன் செலவில் ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிலகோவேஷிசேன்ஸ்க் (Blagoveshchensk ) நகரத்தையும் சீனாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஹெய்ஹீ (Heihe ) நகரத்தையும் இணைக்கும் படியாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.2018 அக்டோபரில் ஹீலாங்ஜியாங் (கருப்பு டிராகன்) நதி என்று உள்ளோர் பெயரிட்ட நதியின் குறுக்கே  சீனா தனது பாலத்தின் பகுதியைக் கட்டி முடித்தது. 2020 இல் ரஷ்யா தனது பணிகளை முடித்தது.

இதையும் படிங்க : இனி ஐநாவில் ஹிந்தி ஒலிக்கும்!

2.2 கிலோமீட்டர் நீளம்  கொண்ட இந்த பாலமானது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. கொரோனா காரணமாக திறக்கப்படாமல் இருந்த இந்தப் பாலத்தை நேற்று திறந்து வைத்தனர். திறந்து வைத்து பேசிய ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் விட்டலி சேவ்ளியேவ் இந்த பாலத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் $1மில்லியன் அளவு வர்த்தகம் நடைபெறும் என்றார். இரண்டு நாடுகளின் அரசியல் , பொருளாதார முன்னேற்றங்களுக்கு இந்த பாலம் பெரிய உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்த இரண்டு நாடுகளின் நட்புறவையும் இப்பாலம் பறைசாற்றும் என்று பெருமிதம் கொண்டார். திறந்து வைக்கும் போது ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு 1 கன்டைனரும் , சீனாவில் இருந்து ரஷ்யாவிற்கு கார் டயர் , மின்னணு சாதனங்கள் ஏற்றிய 8 சரக்கு வண்டிகளும் அனுப்பப்பட்டன.

இதன் மூலம் ரஷியா சீனா இடையே பொருளாதாரம் தாண்டிய ஆயுத வர்த்தகம் கூட வளரும் வாய்ப்புகள் உள்ளது. ரஷ்ய-உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் இந்த பாலத்தின் பங்கு உலக நாடுகளால் பெரிதும் கவனிக்கப்படும். இதனால் அமெரிக்காவின் கவனம் இந்த இரண்டு நாடுகளின் மீதும் அதிகமாக வாய்ப்புள்ளது.

First published:

Tags: China, River bridge construction, Russia