Home /News /international /

மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தியது ரஷ்யா...

மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தியது ரஷ்யா...

ரஷ்யாவின் தாக்குதல் அதிகம் காணப்படும் கார்கிவ், சுமி மற்றும் கீவ் நகரங்களில் அதிகபட்சமாக 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் தாக்குதல் அதிகம் காணப்படும் கார்கிவ், சுமி மற்றும் கீவ் நகரங்களில் அதிகபட்சமாக 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் தாக்குதல் அதிகம் காணப்படும் கார்கிவ், சுமி மற்றும் கீவ் நகரங்களில் அதிகபட்சமாக 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு உதவும் வகையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்தியா தரப்பில் இன்னும் சுமார் 3 ஆயிரம்பேர் வெளியேற்றப்படவுள்ள நிலையில், போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு மத்திய அரசு ரஷ்யாவை கேட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய நேரப்படி நள்ளிவுரவு 12.30 முதல் போர் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் போர் ஆரம்பிக்கும் முன்னர், பதற்றம் நிறைந்த பகுதிகளில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேறி விட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் தாக்குதல் அதிகம் காணப்படும் கார்கிவ், சுமி மற்றும் கீவ் நகரங்களில் அதிகபட்சமாக 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - உக்ரைனில் மேலும் ஒரு இந்தியர் சுடப்பட்டார்: மத்திய அமைச்சர் தகவல்

ரஷ்ய படையெடுப்பால் உக்ரைன் நாட்டில் ஆபத்தான சூழல் நிலவுகிறது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். மீட்பு பணி தொடங்கிய முதல் 4 நாட்களில் 15 விமானங்களில் 3,352 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

இதற்கிடையே, இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவத்தினர் பிணை கைதிகளாக பிடித்து வைத்து மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

இதையும் படிங்க - ரஷ்யாவின் தாக்குதலுக்கு இடையே உக்ரைனில் இந்திய மாணவர்களுக்கு பிரியாணி உணவு வழங்கிய தமிழர்..

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, கார்கிவ் மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள இந்திய மாணவர்களை நாட்டின் மேற்கு பகுதிக்கு அழைத்து செல்ல சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உக்ரைன் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தற்போது ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பதால், இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் உக்ரைனை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

 
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி