ஹோம் /நியூஸ் /உலகம் /

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்- பல கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதம்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்- பல கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதம்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று காலை காமிகேஸ் ட்ரோன்கள் மூலம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaKyivKyiv

  உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா சென்ற வாரம்  தாக்குதலை நடத்தியதையடுத்து தற்போது காமிகேஸ் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பல இடங்களில் கட்டிடங்கள் தீயினால் எரிந்து சேதம் அடைந்ததுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

  உக்ரைன் நேரப்படி காலை 6.45 மணியளவில் கீவ் பகுதியில் நடுவில் இருக்கும் ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மூன்று வெடிச் சத்தம் கேட்கப்பட்டுள்ளது. உடனடியாக எச்சரிக்கை சத்தம் விடப்பட்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தினர். தொடர்ந்து ஏவப்பட்ட காமிகேஸ் ட்ரோன்கள் கீவ் பகுதியில் பல இடங்களில் விழுந்து கட்டிடங்களில் தீயை ஏற்படுத்தியுள்ளது.

  ஜனாதிபதியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக், கீவ் காமிகேஸ் ட்ரோன்கள் தாக்கப்படுவதை சமூக வலைத்தளத்தில் உடனடியாக பதிவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தீ அணைப்பு குழுக்கள் விரைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் காமிகேஸ் ட்ரோன்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

  Also Read : வெள்ளத்தால் சாகும் நைஜீரியா மக்கள்.. 600-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - பசியால் ஏற்பட இருக்கும் அடுத்த அபாயம்

  இந்த தாக்குதலில் ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தியதாக உக்ரைன் கடுமையாகப் புகார் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா தொடர்ந்து ஈரானிய ட்ரோன்களை தாக்குதலில் பயன்படுத்துவதாகக் கூறினார். ஆனால் ஈரான், ரஷ்யாவிற்குப் போருக்கான அயுதங்களைக் கொடுத்தாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய கிரிமியாவில் உள்ள கெர்ச் பாலத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் இறந்ததுடன் பாலம் சேதமடைந்தது. இதற்கு உக்ரைனைக் குற்றம் சாட்டிய ரஷ்யா கடந்த வாரம் உக்ரைன் தலைநகர் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Russia, Russia - Ukraine