Why Russia and Ukraine are fighting:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அப்படி என்னதான் தகராறு? ரஷ்யாவுக்கும், அண்டை நாடான உக்ரைனுக்கும் என்னதான் பகை?
அண்டை நாடான உக்ரைனை தாக்கும் திட்டம் இல்லை என, பல மாதங்களாக மறுத்துவந்த புதின், இப்போது அதை நடத்திக் காட்டிவிட்டார். அப்படி என்னதான் கடுப்பு உக்ரைன் மீது புதினுக்கு? ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரியமிக்க உக்ரைன், பரப்பளவில் ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்து மிகப்பெரிய நாடாகும். தங்களிடமிருந்து செயற்கையான காரணங்களைக் கூறி, உக்ரைன் பிரிக்கப்பட்டதாக புதினும், இல்லை இல்லை அது பொய்ப்பிரசாரம் என உக்ரைனியரும் கூறி வருகின்றனர்.

ரஷ்ய அதிபர் புடின்
Also Read: ரஷ்யா எதிர்ப்பு கூட்டணியை உருவாக்கும் உக்ரைன் அதிபர் வோலோடைமிர் செலன்ஸ்கி
புதின் ஒரு படி மேலே போய், உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவை என்றும், அது ஒழுக்கமற்ற நாடு என்றும் கூறி வந்தார். இந்த சூழலில்தான், வடக்கு அட்லாண்டிக் பிராந்திய நாடுகள் அமைப்பான, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளுடன், கைகோர்க்கும் கடைசி தருவாயில் இருந்தது உக்ரைன். நேட்டோவில் உக்ரைன் சேர்ந்துவிட்டால் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் எளிதில் தங்களை நெருங்கிவிட முடியும் என புதின் கருதினார். அதனால் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரக்கூடாது என்றும், ஆயுதங்களை அழித்துவிட்டு நடுநிலை நாடாக மாறவேண்டும் என்றும் புதின் எச்சரித்து வந்தார்.
புதினின் கோபத்திற்கு காரணம் என்ன?
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியோ, நேட்டோவில் தங்களை இணைக்க வேண்டும் என கடந்த ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறார். இது புதினுக்கு கடும்கோபத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ என்றாலே புதினுக்கு எட்டிக்காயாய் கசக்கும். மேலும் உக்ரைனை, பாதுகாப்பான அரணாக ரஷ்யாவும், மேலை நாடுகளும் பார்த்ததே அதற்கு ஆபத்தாய் முடிந்திருக்கிறது.

நேட்டோ
உக்ரைனில் ரஷ்யாவின் விளையாட்டு
உக்ரைனின் பெரும்பகுதி பல நூற்றாண்டுகளாக ரஷ்யா வசம் இருந்ததும், உக்ரைனில் கோடிக்கணக்கானோர் ரஷ்ய மொழி பேசுவதும், 1991 வரை சோவியத்தின் அங்கமுமாக இருந்ததுமே புதினுக்கு உக்ரைன் பிரிவு வாட்டியது. 2014-ல் உக்ரைன் மக்கள் போராட்டம் நடத்தி, ரஷ்யாவுக்கு ஆதரவான அதிபரை பதவியிழக்கச் செய்தனர். அதற்கு பழிதீர்க்கும் விதமாக உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை வலுக்கட்டாயமாக ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
Also Read: ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்க தலைமை நேட்டோ ஆதரவு ஏன்?- ஒரு வரலாற்றுப் பார்வை
ரஷ்ய மொழி பேசும் உக்ரைனின், கிழக்குப் பகுதியில் டோன்பாஸ் பகுதியில் கிளச்சியாளர்களை ஊக்குவித்து அரசு அலுவலகங்களை ஆக்கிரமிக்கச் செய்தது. டோன்பாஸ் பகுதியை கருவியாக பயன்படுத்தி ரஷ்யா விளையாடி வந்தது. சோவியத்தில் இருந்து பிரிந்த ஏராளமான நாடுகள் ஐரோப்பிய யூனியன் அல்லது நேட்டோவில் சேர்ந்துவிட்டநிலையில், உக்ரைனும் சேர்ந்துவிட்டால், ரஷ்யா தனித்தீவாகிவிட்டதைப் போலாகிவிடும். அதனால்தான் புதின் படாதபாடு படுகிறார்.
சரி உக்ரைனுக்கு என்ன வேண்டும். 2001-ல் நடந்த வாக்கெடுப்பில் பாதிக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள், சோவியத் யூனியனுடனான நெருக்கத்தைவிரும்பவில்லை. ஆனால் இப்போதோ 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேலை நாடுகளுடன் இணைய வேண்டும் என்றும் ரஷ்யாவுடன் நெருக்கம் கூடாது என்றும் திடமாக கூறிவருகின்றனர். அவர்களில் பலர் ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தவும் தயாராவிட்டனர்.
உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள
உதவி எண் : +91 9940256444 / +91 9600023645, 044-2851 5288
மின்னஞ்சல் : nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com
வலைதளம் :
https://nrtamils.tn.gov.in
Facebook :
https://www.facebook.com/nrtchennai1038
Twitter : @
tamiliansNRT
மத்திய வெளியுறவுத்துறை உதவி எண்கள்:
1800118797 (Toll free)
+91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905
மின்னஞ்சல்: situationroom@mea.gov.in
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.