உக்ரைனில் உயிரி ஆயுத திட்டங்கள் தொடர்பான ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துவிட்டது. உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்கள் மாநாட்டு ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனில் அமெரிக்கா ஆதரவுடன் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக ரஷ்யா தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான ரஷ்யா தூதர், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ஆய்வகங்களில் உயிரி ஆயுதம் தயாரித்ததற்கான தடயங்கள் அவசரமாக அழிக்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும், அமெரிக்காவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைப்பு நிறுவன நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், உக்ரைனில் 30 உயிரியல் ஆய்வகங்களின் வலையமைப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். உயிரி ஆயுதம் கட்டுப்பாடின்றி பரவினால் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். உக்ரைனில் உயிரி ஆயுத திட்டங்கள் தொடர்பான ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துவிட்டது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.