ஹோம் /நியூஸ் /உலகம் /

உக்ரைனின் மின் நிலையங்களில் ரஷ்யா குண்டு வீச்சு - 12 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் மின் நிலையங்களில் ரஷ்யா குண்டு வீச்சு - 12 பேர் உயிரிழப்பு

டினிப்ரோ நகரில் தாக்கப்பட்ட கட்டிடம்

டினிப்ரோ நகரில் தாக்கப்பட்ட கட்டிடம்

Ukraine - Russia War : உக்ரைனின் நகரங்களில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inte, IndiaUkraine

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சனிக்கிழமை அன்று ரஷ்யா உக்ரைனின் மின் நிலையங்களில் தாக்குதல் நடத்தினர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 10 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நிலவி வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் திடீர் தாக்குதலை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் புகார் அளித்தார்.

இரு நாடுகளும் இடையே நடைபெற்ற தாக்குதலில் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைனில் மின் இணைப்பு இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திவந்தனர். இதனால் உக்ரைனின் பெரும்பாலான  நகரங்கள் இருளில் மூழ்கியது.

Also Read : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவோடு கூட்டணி சேரும் ஜப்பான்..!

மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. மின் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த உக்ரைன் மின் உபயோகத்தைப் பல முக்கிய நகரங்களில் குறைத்தனர். தற்போது மீண்டும் ரஷ்யா, உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் பெரிய நகரமான கார்கிவ் நகரங்களில் சனிக்கிழமை அன்று குண்டு மழை பொழிந்துள்ளன.

இதேபோன்று டினிப்ரோ (Dnipro) நகரில் 9 மாடிக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மின் நிலையத்தின் மீது ரஷ்யப் படைகள் ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளன. இந்த தாக்குதலில் அந்த கட்டிடம் இடிந்து சேதமடைந்தது. அதில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Russia - Ukraine, War