ஹோம் /நியூஸ் /உலகம் /

சீன அதிபர் ஜி ஜின்பிங் கைது? உண்மை என்ன?

சீன அதிபர் ஜி ஜின்பிங் கைது? உண்மை என்ன?

ஜி ஜிங்பிங்

ஜி ஜிங்பிங்

Chinese President Xi Jinping | சீனா அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் உள்ளதாக இணையத்தில் பெருமளவு தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • internat, IndiaeijingBeijing

    சீனா அதிபர் ஜி ஜின்பிங் - வின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவர் தற்போது வீட்டுக் காவலில் உள்ளதாக  இணையத்தில் பெருமளவில் தகவல் வெளியாகும் நிலையில் அதன் உண்மை என்ன என்பதை பார்க்கலாம்.

    சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரும் அதிபருமான ஜி ஜின்பிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் தற்போது பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து அவரை பதவியிலிருந்து இறக்கி விட்டனர் என்று சீனா சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல் வேகமாகப் பரவியது.

    மேலும் இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெய்ஜிங்கில் உண்மையில் நடந்தது என்ன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சீனா மக்கள் சமூக வலைத்தளத்தில் பெய்ஜிங் பகுதி முழுமையாக ராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு மூடப்பட்டுள்ளது என்று புகார்கள் முன் வைக்கப்படுகிறது.

    இதனையடுத்து வந்த தகவல்களில் மத்திய பாதுகாப்பு பணியகத்தின் கட்டுப்பாட்டைச் சீனா முன்னாள் அதிபர் ஹு ஜிண்டோ மற்றும் பிரதமர் வென் ஜிபாவோ இணைந்து எடுத்துக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

    மேலும் கடந்த 16ம் தேதி அதிபர் ஜி ஜின்பிங் sco மாநாடு முடித்து பெய்ஜிங் வந்த போது அவரை விமான நிலையத்தில் வைத்தே நுழைய அனுமதி மறுத்து வீட்டுக் காவலில் வைத்துள்ளனர் என்று கூறிவருகின்றனர். சீனா மக்கள் சில பெய்ஜிங் வெளிப்பகுதிகளில் தென்படும் ராணுவ வாகனங்களைக் காணொளியாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    Also Read : புலம் பெயர் மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 77 பேர் பரிதாப மரணம்

    தற்போது வெளியாகியுள்ள தகவல்களில் எது உண்மை என்று தெரியாமல்  மக்கள் குழம்பியுள்ள நிலையில், இவை அனைத்தும் சமூக வலைத்தளத்தில் பரவும் வதந்திகள் என்று தெரியவந்துள்ளது.

    சீனாவின் உலக ஊடகமான சிசிடிவி மற்றும் சிஜிடிஎன் - யில் இது வரை அது பற்றிய எந்த செய்திகளும் வெளிவரவில்லை. மேலும் முதன்மையான ஊடகங்களிலும் இது வரை எந்த வித தகவல்களும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Janvi
    First published:

    Tags: China, Xi jinping