• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பூமியை அழிவிலிருந்து காக்க என்ன செய்கின்றன உலக நாடுகள்? பாரிஸ் ஒப்பந்தம் என்னவானது?

பூமியை அழிவிலிருந்து காக்க என்ன செய்கின்றன உலக நாடுகள்? பாரிஸ் ஒப்பந்தம் என்னவானது?

பாரீஸ் ஒப்பந்தத்தில் பின்பற்றப்பட வேண்டிய ‘Rule Book' உலக நாடுகளால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாமல் உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் போலாந்தில் கூடியுள்ளனர்.

ஐநா-வின் சார்பில் காலநிலை ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டி 1992-ம் ஆண்டு அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் HW புஷ் தலைமையில் கையெழுத்தானது. அதன் பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு உலக நாடுகள் இணைந்து பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தை முன் வைத்தனர். இதன் அடிப்படையில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அனைத்தும் புவி வெப்பமயமாதலைக் குறைக்க நச்சு வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால், காலப்போக்கில் பாரீஸ் ஒப்பந்தம் குறித்த விழிப்புணர்வுகள் குறைந்துவிட்டன. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாகவே அறிவித்தது. இதனால் புவி வெப்பமடைதலைக் குறைக்க உலக நாடுகளை இணைத்து ஐநா எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

புவி வெப்பமடைவதால் உலகில் ஏற்படும் விளைவுகள் குறித்து தொடர்ந்து ஐநா அறிக்கைகள் பல வெளியிட்டது. கடல் மட்டம் உயர்வது, பனி உறைதல், பேரழிவுகள் தொடர்தல், பல்லுயிர் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் என அனைத்தும் உலக மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன. இதனால் கொண்டு வரப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் இணைந்து ‘Rule Book' கொண்டுவந்து பின்பற்ற வேண்டும் என முடிவானது. இதற்காகத் தான் சுமார் 200 நாடுகளின் பிரதிநிதிகள் போலாந்தில் கூடியுள்ளனர்.

இந்த ‘Rule Book' தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தப்படி கையெழுத்திடும் நாடுகள், அண்டைய நாடுகள் அந்த ஒப்பந்தத்தைப் பின்பற்றி கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்குமா என்ற சந்தேகக் கேள்விகளை முன்வைக்கின்றன. இது போன்ற ‘Rule Book' கொண்டு வருவது தங்களது நாட்டின் இறையான்மையில் தலையிடுவது போன்றதாகும் என்றும் வளர்ந்து வரும் நாடுகள் முட்டுக்கட்டையாக நிற்கின்றன.

ஐநா அறிக்கையின் அடிப்படையில் ஆண்டுக்கு 40 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறிகிறதாம். இதனால், தாவர உலகமே பெரும் அழிவை நோக்கி நகர்கின்றன என்று அச்சம் தெரிவிக்கிறது ஐநா. இந்த சூழலில் காலநிலை மாற்றம் தரும் பாதிப்புகளைக் குறைக்க உலக நாடுகள் இணைந்து ‘Rule Book’-ஐ பின்பற்ற வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஒப்பந்தத்தில் இணையும் நாடுகள் தங்களது உத்திரவாதத்தை காக்குமா என்பது பாரீஸ் ஒப்பந்தத்துக்கு முன் நிற்கும் சவால்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2020-க்குளாவது உலக நாடுகள் இணைந்து முயற்சித்தால் மட்டுமே காலநிலை மாற்றத்துக்கு ஒரு தடுப்பை இவ்வுலகத்தால் ஏற்படுத்த முடியும். ஒரு டிகிரி வெப்பம் அதிகரித்ததால் ஆர்டிக்கும் அண்டார்டிக்காவும் உருகி வருகின்றன. இது மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

நிலைமை மோசமாகி வந்தாலும் அமெரிக்கா உடன் சவுதி அரேபியா, ரஷ்யா, குவைத் போன்ற நாடுகள் இன்னும் பெரும் தடையாக முன் நின்று வருகின்றன. ‘Rule Book' இந்த நாடுகளை எந்த வகையில் பாதிக்கிறது? சுய வளர்ச்சிக்காக இந்த நாடுகள் சர்வதேச ஒப்பந்தத்துக்குள் வர மறுக்கின்றனவா? என்று பல கேள்விகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் எழுப்பப்படுகின்றன.

மேலும் பார்க்க: திமுகவில் நானா?... அமமுகவின் பழனியப்பன் பதில்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: