60 வயது பாட்டியைத் தவிக்கவிட்ட விமான நிறுவனங்கள்... 70 லட்ச ரூபாய் நஷ்டஈடு தர உத்தரவு!

தகுந்த விசா இன்றி டென்மார்க் நாட்டில் இறங்கியதால் சட்ட விரோதக் குற்றச்சாட்டில் ஹர்ஷன் கவுர் கைது செய்யப்பட்டார்.

60 வயது பாட்டியைத் தவிக்கவிட்ட விமான நிறுவனங்கள்... 70 லட்ச ரூபாய் நஷ்டஈடு தர உத்தரவு!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: February 10, 2020, 3:21 PM IST
  • Share this:
சண்டிகரைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஹர்ஷன் கவுர். கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்குப் பயணமானார்.

சண்டிகரில் உள்ள சூர்யா ட்ராவல்ஸ் நிறுவனம் மூலம் அமெரிக்காவுக்கு செல்லவும் திரும்பி வரவும் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்திருந்துள்ளார் ஹர்ஷன் கவுர். ஜனவரியில் சென்றவர் மார்ச் மாதம் இந்தியாவுக்குத் திரும்ப டிக்கெட் எடுத்துள்ளார். லுஃப்தான்ஸா விமான நிறுவனத்தின் அலட்சியப் போக்கால் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து ஃப்ராங்க்ஃபர்ட் வழியாக டில்லி வர வேண்டியவரை டென்மார்க் நாட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

டென்மார்க்கின் கோப்பனேகன் விமான நிலையத்தில் அவருக்கான டில்லி விமானம் வரும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், டில்லி விமானம் வரவில்லை. இதனால் தகுந்த விசா இன்றி டென்மார்க் நாட்டில் இறங்கியதால் சட்ட விரோதக் குற்றச்சாட்டில் ஹர்ஷன் கவுர் கைது செய்யப்பட்டார். ஒரு இரவு முழுவதும் சிறைவாசம் அனுபவித்த ஹர்ஷன் காலையில் தனது மகனின் உதவியால் வேறொரு விமான நிறுவனத்தின் மூலம் டில்லிக்கு அனுப்பப்பட்டார்.


இதுதொடர்பாக பின்னர் ஹர்ஷன் கவுர் சண்டிகர் நுகர்வோர் ஆணையத்திடம் புகார் அளித்தார். இவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக அவருக்கு உதவாத லுஃப்தான்ஸா மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனங்களுக்கு 64.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சூர்யா ட்ராவல்ஸ் 5 லட்சம் ரூபாயும் தவறுக்குக் காரணமான மூன்று தரப்பினர்களும் இணைந்து கூடுதலாக 50 ஆயிரம் ரூபாயையும் ஹர்ஷன் கவுருக்குத் தருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 4,600 கோடி ரூபாய்க்கு சொகுசு படகு வாங்கியுள்ள பில் கேட்ஸ்... கிறுகிறுக்க வைக்கும் வசதிகள்!
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading