குழந்தையை பெற்றெடுப்பதிலும், அவர்களை கண்ணும், கருத்துமாக வளர்ப்பதிலும் சாதாரண பெற்றோர்களுக்கு என்னென்ன கடமைகள் உண்டு என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் தாய்மைக்கு உரிய கடமைகளை தவறாமல் செய்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
எத்தனை பணியாட்கள், பணிப்பெண்கள் இருந்தாலும் தாய்க்கு உரிய கடமையை குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள் மட்டுமே செய்ய முடியும். அந்த வகையில், பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேட் மிடில்டன் அரச குடும்பத்து தாயாராக இருந்தாலும், குழந்தைகளை அன்போடும், அர்ப்பணிப்போடும் வளர்த்து வருகிறார். கேம்பிரிட்ஜ் பகுதிக்கான இளவரசராக இருப்பவர் வில்லியம். இவரது மனைவி கேட் மிடில்டன். இவர்களது வாழ்க்கைச் சூழல் குறித்து முன்பு எடுக்கப்பட்ட பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
மக்களின் பார்வைக்கு இவர்கள் சொகுசான வாழ்க்கையை வாழ்வது போன்றும், அனைத்து பிரச்சனைகளுக்கும் இவர்களுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்பது போன்றும் மாயத்தோற்றம் நிலவுகிறது. ஆனால், எல்லா தாய், தந்தையரையும் போல இவர்களுக்கும் பெற்றோருக்கு உண்டான சவால்கள் நிறையவே இருக்கின்றன. வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியருக்கு இளவரசர் ஜார்ஜ், இளவரசி சர்லோட்டே, இளவரசர் லூயிஸ் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். கேட் மிடில்டன் சொகுசான வாழ்க்கையை வாழ்பவர் என்றாலும்கூட, கர்ப்ப காலத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களையும், தாயாக தற்போது எதிர்கொண்டு வரும் சவால்களையும் அவர் அவ்வபோது வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்.
இதையும் படியுங்கள் : புதிய கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கும் சீன விஞ்ஞானிகள்..
பொது இடங்களிலும் அல்லது வீட்டிலும் குழந்தைகளின் சேட்டைகளை கையாளுவது கேட் மிடில்டனுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. ஆனால், அதற்கும் கூட அவர் எளிய தீர்வுகளை கையில் வைத்திருக்கிறார். இளவரசர் ஜார்ஜ் சேட்டை செய்யும் ஒவ்வொரு சமயத்தின் போதும் ”சரி, சரி இப்போது விளையாடலாம்’’ என்று கூறி விளையாட்டு பொம்மைகளையும், புதிர் விளையாட்டு சாதனங்களையும் அவரிடம் ஒப்படைக்கிறார் கேட் மிடில்டன். அவற்றைக் கண்டவுடன் இளவரசர் அப்படியே அமைதியாகி விடுவது உண்டு.
சில சமயம் பொது இடங்களில் குழந்தைகள் சேட்டை செய்யும் போது இது போன்று பொம்மைகளையும், விளையாட்டு பொருட்களையும் கொடுப்பது சாத்தியமில்லை என்ற சூழலில் அவர்களை சாந்தப்படுத்த மிகுந்த அன்பான, அரவணைப்பு மிகுந்த வார்த்தைகளை பயன்படுத்தி தனது தாய்மையின் வல்லமையை நிரூபிக்கிறார் கேட் மிடில்டன். குழந்தைகளை நிறைய நேரம் வெளியே விளையாட அனுமதிப்பது, மிக இயல்பான செயல்களை செய்ய அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக அவர்களை எப்போதும் குதூகலத்தில் வைத்திருக்க முடியும் என்பது கேட் மிடில்டன் கடைப்பிடித்துவரும் கொள்கைகளில் ஒன்று.
அதேசமயம், இளவரசர் வில்லியமும் குழந்தைகளை வளர்ப்பதில் தனக்குரிய கடமைகளில் இருந்து விலகுவதில்லை. எப்போதும் மனைவியின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறார் அவர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Children, Parenting, Royal Family