இங்கிலாந்துக்கு மூன்று நாள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, இங்கிலாந்து அரண்மனையில் ராணி எலிசபெத் உற்சாக வரவேற்பு தந்து விருந்தளித்தார். டிரம்பின் இங்கிலாந்து வருகை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரை எதிர்த்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவின் அதிபரான டிரம்ப் பரபரப்பான சூழலில் இங்கிலாந்தை நேற்று சென்றடைந்தார். லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி வீட்டுக்கு டிரம்பும், மனைவி மெலானி டிரம்பும் சென்றனர். பின்னர், ஹெலிகாப்டரில் பக்கிங்காம் அரண்மனைக்கு சென்ற டிரம்ப் தம்பதியரை இளவரசர் சார்லஸ் வரவேற்றார். பின்னர் டிரம்புக்கு அரண்மனையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது, டிரம்புக்கு விருந்தளித்த ராணி எலிசபெத், வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய புத்தகத்தையும், விலை உயர்ந்த பேனாக்களையும் பரிசளித்தார்.
அதைத் தொடர்ந்து வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் உள்ள உலகப்போரில் உயிர்நீத்த அடையாளம் தெரியாத வீரர்களின் சமாதியில் டிரம்ப் அஞ்சலி செலுத்தினார்.
வரும் வெள்ளிக்கிழமை பதவி விலகவுள்ள பிரதமர் தெரசா மேவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், பிரான்சில் உள்ள நார்மண்டி கடல்பகுதியில் 1944-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்து, அமெரிக்க மற்றும் நேச நாடுகள் படைகளைக் குவித்ததன் 75-வது நினைவு தின நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார். அதற்கு முன்பாக, அயர்லாந்தும் செல்கிறார்.

ட்ரம்ப் - ராணி எலிசபெத்
முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் தெரசா மேவின் முடிவை டிரம்ப் விமர்சித்திருந்தார். மேலும் லண்டன் மேயர் சாதிக் கானுடனும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறார். லண்டனுக்கு வந்து இறங்கும்முன்பே தோத்தாங்குலி என்று பொருள்பட சஜீத்கானை விமர்சித்து டிரம்ப் ட்வீட் செய்திருந்தார். இதுபோல் பல சர்ச்சைகளுக்கிடையே இங்கிலாந்தில் டிரம்ப் வலம்வந்து கொண்டிருக்கிறார்.
இதனிடையே டிரம்ப்பின் வருகையையொட்டி இங்கிலாந்தில் பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராட்சத பலூன்களில் எதிர்ப்பு வாசகங்களை எழுதியும், மைதானங்களில் சர்ச்சைக் கருத்துக்களைத் தெரிவித்தும் எதிர்ப்பினை பதி்வு செய்துவருகின்றனர்.
Also see... இந்தியா வர மோடி விடுத்த அழைப்பை நிராகரித்தார் டிரம்ப்..!
Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.