சீனாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு பணிகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கமான அளவிற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத போதும், அங்கு வந்திருந்தவர்களை கவனிக்க வித்தியாசமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவகங்கள், தங்கும் விடுதிகள் என எங்கும் ரோபோ மயமாக பெய்ஜிங் காட்சியளித்தது. டம்ப்ளிங்ஸ், ஹாம்பர்க்கர், நூடுல்ஸ் என விதவிதமான உணவுகளை சமைக்க மட்டும் 18 ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன.
ரோபோக்கள் தயாரித்த உணவை வாடிக்கையாளரின் டேபிளுக்கே பறந்து வந்து சப்ளை செய்தன சர்வர் ரோபோக்கள்.
இதையும் படிங்க: உக்ரைன் மீது இன்னும் சில நாட்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்: அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
உணவு சாப்பிட்டதும் காக்டெய்ல் குடிக்க வேண்டுமா, அதையும் தயார் செய்து கொடுக்க பார்டெண்டர் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மனிதர்களைப் போலவே மதுபான வகைகள் மற்றும் பழச்சாறு வகைகளை இந்த ரோபோக்கள் அழகாக கலந்துகொடுத்தன. அதுவும் வெறும் 90 நொடிகளில்….
காக்டெய்ல் குடிக்காதவர்களுக்கு ஐஸ்கிரீம் தேவைப்பட்டால், அவர்கள் விரும்பும் வகையில் அதனை அலங்காரம் செய்து கொடுத்தன ரோபோக்கள்….
இதுமட்டுமா, தங்கும் விடுதிகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்வது, உணவு சமைக்க பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களைக் கழுவுவது என மனிதர்கள் செய்யும் பணிகள் அனைத்தையும் திறம்பட செய்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை இந்த ரோபோக்கள் பெற்றன.
பெரும்பாலானவர்கள் இந்த ரோபோக்களின் சேவையை விரும்பினாலும், மனிதர்கள் கையால் சமைத்து, பரிமாறும் திருப்தி இதில் இல்லை என்பதே சில வாடிக்கையாளர்களின் கருத்தாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.