Home /News /international /

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் உயிரிழப்பு..

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் உயிரிழப்பு..

ராபர்ட் ட்ரம்ப்

ராபர்ட் ட்ரம்ப்

உயிரிழப்புக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாக நெருங்கிய உறவினர் வட்டாரத்தில் இருந்து தகவல் பெறப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

    உடல்நலக்குறைவு காரணமாக நியூயார்க் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பில் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 71.

    உடல்நலக்குறைவு காரணமாக ராபர்ட் ட்ரம்பின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதாக வெள்ளை மாளிகை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதும், வெள்ளிக்கிழமை நியூயார்க் சிட்டி மருத்துவமனைக்கு சென்று அவரது சகோதரரைப் பார்த்தார் டொனால்ட் ட்ரம்ப்.

    மேலும் படிக்க: கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பைத் தொடங்கியது ரஷ்யா - இண்டெர்ஃபேக்ஸ் செய்தி ஏஜென்சி தகவல்

    சகோதரரின் மரணம் குறித்து பகிர்ந்த இரங்கல் குறிப்பில், “அவர் எனக்கு சகோதரர் மட்டுமல்ல. என்னுடைய சிறந்த நண்பன். நாங்கள் மறுபடியும் சந்திப்போம். அவருடைய நினைவுகள் என் மனதில் வாழும். ராபர்ட் நான் உன்னை நேசிக்கிறேன். அமைதிகொள்” என்று தெரிவித்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.

    உயிரிழப்புக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாக நெருங்கிய உறவினர் வட்டாரத்தில் இருந்து தகவல் பெறப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
    Published by:Gunavathy
    First published:

    Tags: President Donald Trump

    அடுத்த செய்தி