ஆப்கனில் தீவிரவாத குழுக்களுக்கு இடையே விரைவில் மோதல் ஏற்படும் அபாயம்

தாலிபான்கள்

தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று சர்வதேச நாடுகளுக்கு தாலிபான்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்

 • Share this:
  ஆப்கானிஸ்தானில் ஐஎஸ், ஜெய்ஸ்-இ-முகம்மது மற்றும் லஷ்கர் இ தோய்பா தீவிரவாதிகளும் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிரவாத குழுக்களுக்கு இடையே விரைவில் மோதல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

  ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அங்கிருந்து வெளியேற மக்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் காபூலுக்கு ஐஎஸ், ஜெய்ஸ்-இ-முகம்மது, லஷ்கர்-இ-தோய்பா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள், கடந்த சில நாட்களாகவே வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாலிபான் கொடிகளை ஏந்தியபடி, வெளிநாட்டு தீவிரவாதிகள் வந்ததாகவும், இதுகுறித்த தகவல்கள் தாலிபான் அமைப்பினருக்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது.

  also read : ஷரியா சட்டப்படி பெண்களுக்கு உரிமை, எங்களால் எந்த நாட்டுக்கும் ஆபத்தில்லை - தாலிபான்களின் முதல் பிரஸ்மீட் ஹைலைட்ஸ்!

  தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று சர்வதேச நாடுகளுக்கு தாலிபான்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதனால், தீவிரவாத குழுக்களுக்கு இடையே விரைவில் மோதல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனிடையே, தாலிபான் நிறுவனர் முல்லா ஓமரின் மகன் முல்லா யாகுப், ஆப்கானிஸ்தான் வந்துள்ளார். தாலிபான் ஆட்சியை அமைப்பதற்காக அவர் விரைவில் பணிகளைத் தொடங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Also Read : தாலிபான்கள் என்னை கொல்லப்போகிறார்கள்.. காத்திருக்கிறேன் - ஆப்கான் முதல் பெண் மேயர் கண்ணீர்

  இதனிடையே, தாமே புதிய இடைக்கால அதிபர் என்று ஆப்கானிஸ்தான் துணை அதிபராக உள்ள, அம்ருல்லா சாலே டிவிட்டரில் அறிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அந்நாட்டு அரசியலமைப்புச்சட்டத்தின்படி, ஒரு அதிபர் இறந்துவிட்டாலோ, நாட்டில் இல்லை என்றாலோ துணை அதிபரை, அதிபராக்கலாம் என்று கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் மண்ணிலேயே தாம் இருப்பதாகவும், அனைத்து அரசியல்வாதிகளின் ஆதரவையும் கோர உள்ளதாகவும் அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: