ஹோம் /நியூஸ் /உலகம் /

குச்சிப்புடி நடனமாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்-கின் மகள்..!

குச்சிப்புடி நடனமாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்-கின் மகள்..!

அனோஷ்கா சுனக்

அனோஷ்கா சுனக்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் அனோஷ்கா சுனாக் லண்டனில் நடைபெற்ற விழா ஒன்றில் குச்சிப்புடி நடனமாடி அசத்தியுள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaLondonLondon

பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருப்பவர் ரிஷி சுனக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷி சுனக்கின் திருமணம் பிரபல தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியுடன் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு அனோஷ்கா சுனக் என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், அனோஷ்கா சுனாக் தற்போது லண்டனில் நடைபெற்ற விழா ஒன்றில் குச்சிப்புடி நடனமாடி அசத்தியுள்ளார். ரங்க் 2022 என்ற பெயரில் இந்த நிகழ்வானது லண்டனில் அரங்கேற்றப்பட்டது. பிரபல குச்சிப்புடி கலைஞரான அருணிமா குமார் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளார்.

இதில் 4 முதல் 85 வயதுக்கு உட்பட்ட 100 கலைஞர்கள் பங்கேற்றனர். நாட்டின் 75ஆவது சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'குச்சிப்புடியின் வண்ணங்கள் மற்றும் இந்திய நடனங்களின் வண்ணம்' என்ற தலைப்பில் இந்த விழா நடைபெற்றது.

தனது அரங்கேற்றம் குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அனோஷ்கா, "எனக்கு குச்சிப்புடி நடனம் மிகவும் பிடிக்கும். குச்சிப்புடி நடனமாடும் போதும் அனைத்து கவலைகளும் மறந்து ஆனந்தமான மனநிலை இருக்கும். நான் இந்திய நாட்டில் இருந்து தான் வந்துள்ளேன். என்னுடைய வீடு, குடும்பம், கலாசாரம் ஆகியவை ஒருங்கிணையும் இடம் இது. எனவே, ஆண்டுதோறும் அங்கு செல்ல விரும்புவேன்" என்றார்.

அனோஷ்காவின் இந்த நடன நிகழ்வை தாய் அக்ஷதா மூர்த்தி, தாத்தா, பாட்டி உள்ளிட்டோர் நேரில் கண்டுகளித்தனர். பிரிட்டன் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமை பெற்றவர் ரிஷி சுனக். ரிஷி சுனக்கிற்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அதில் கிருஷ்ணா சுனக் என்பவர் மூத்த மகள், அனோஷ்கா சுனக் இளைய மகள் ஆவர்.

First published:

Tags: Dance, Rishi Sunak, Viral Video