இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மருமகனுக்கு பிரிட்டன் நிதி அமைச்சர் பதவி..!

2014-ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வந்தவரை தற்போது நிதி அமைச்சராக நியமித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மருமகனுக்கு பிரிட்டன் நிதி அமைச்சர் பதவி..!
ரிஷி சுனக்
  • News18
  • Last Updated: February 13, 2020, 6:44 PM IST
  • Share this:
இந்தியாவின் டெக் ஜாம்பவான் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் பிரிட்டனின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

39 வயதான ரிஷி, நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதாவின் கணவர் ஆவார். கடந்த 2009-ம் ஆண்டு திருமண முடிந்த இத்தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்த ரிஷி அதன் பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ நிறைவு செய்தார்.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தன் சக கல்லூரித் தோழியான அக்‌ஷதா உடன் ஏற்பட்ட நட்புறவில் அவரைத் திருமணமும் செய்து கொண்டார். முதலீட்டு வங்கி ஆலோசகாரகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் ரிஷி. 2014-ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வந்தவரை தற்போது நிதி அமைச்சராக நியமித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
மேலும் பார்க்க: தோழிக்காக 1,177 கோடி ரூபாயில் வீடு வாங்கியிருக்கும் அமேசான் முதலாளி... மலைக்க வைக்கும் வசதிகள்..!
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading