முகப்பு /செய்தி /உலகம் / பிரிட்டன் பிரதமர் ரேசில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடு!

பிரிட்டன் பிரதமர் ரேசில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடு!

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

Rishi Sunak | இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரிட்டன் அதிபர் தேர்தலில் நிற்பதாக ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaBritainBritainBritainBritain

பிரிட்டனின் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து யார் வரப்போகிறார்கள் என்று கடும் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தற்போது இந்திய வம்சாவளி எம்.பி ரிஷி சுனக் தேர்தலில் நிற்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில்,  இங்கிலாந்து ஒரு நல்ல நாடு ஆனால் தற்போது பொருளாதார நெருக்கடி சந்தித்து வருகிறது. அதற்காகத் தான் நான் கன்சன்வேடிவ் கட்சியில் தலைவராகவும், பிரிட்டனின் பிரதமராகவும் நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.

தான் நாட்டின் பொருளாதாரத்தைச் சரிசெய்யவும், கட்சியை ஒருங்கிணைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு முன்பு முன்னால் அதிபர் போரிஸ் ஜான்சனை ரிஷி சுனக் சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

முன்னாள் அதிபர் போரிஸ் ஜான்சன் பதவி விலகிய பின்பு கன்சர்வேட்டிவ் கட்சியில் நடந்த தேர்தலில் ரிஷி சுனக், லிஸ் டிரஸ்- யை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் ரிஷி சுனக் இரண்டாம் முறை நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : மூன்றாம் முறை சீனாவின் அதிபரானார் ஜி ஜின்பிங்..! - மாவோவை தொடர்ந்து வரலாற்று சாதனை படைத்தார்!

வரும் அக்டோபர் 28ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரிட்டனின் பிரதமராக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு வளர்ந்து வருகிறது.

First published:

Tags: Election, Prime minister, UK