ஹோம் /நியூஸ் /உலகம் /

பிரிட்டன் பிரதமருமான போட்டியில் ரிஷி சுனக் முன்னிலை... பின் வாங்கிய போரிஸ் ஜான்சன் - அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

பிரிட்டன் பிரதமருமான போட்டியில் ரிஷி சுனக் முன்னிலை... பின் வாங்கிய போரிஸ் ஜான்சன் - அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

பிரதமர் போட்டியில் முன்னிலை ரிஷி சுனக்

பிரதமர் போட்டியில் முன்னிலை ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் தேர்வில் அதிக ஆதரவுகளுடன் ரிஷி சுனக் முன்னிலையில் உள்ளார். இன்று பிரதமார அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaBritain Britain Britain

  பிரிட்டனின் பிரதமர் தேர்வுக்கான ஆதரவு தேடல் விறுவிறு வென்று நடந்துகொண்டு இருக்கும் நிலையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆவதில் நாட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

  பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் வெறும் 45 நாட்களில் ராஜினாமா செய்த நிலையில் தற்போது கன்சர்வேட்டிவ் கட்சியில் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமர் பதவி காலியாகியுள்ளது. அதற்கான தேர்வு வரும் அக்டோபர் 28 தேதி  நடைபெறும் அறிவிக்கப்பட்டது.

  இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் தேர்வில், இதற்கு முன்பு தேர்வில் நின்று தோல்வி அடைந்த ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய தலைவர் பென்னி மோர்டான்ட் போன்றவர்கள் நிற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  Also Read : மரண குழியில் இருந்து போலீசாருக்கு சென்ற போன்கால்.. சினிமாவை மிஞ்சும் ஷாக் சம்பவம்!

  தற்போது முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் நிற்கப்போவது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிக எம்.பி -களின் ஆதரவுகளுடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலையில் உள்ளார். மேலும் தேர்வுக்கான ஆதரவு திரட்டும் பணியில் பென்னி மோர்டான்ட் மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில் அவருக்கான கால அவகாசம் குறைந்து கொண்டே செல்கிறது.

  Published by:Janvi
  First published:

  Tags: Britain, Prime minister, UK