ஹோம் /நியூஸ் /உலகம் /

பிரிட்டன் அரசியலில் பரபரப்பு: தீவிரமாக நடக்கும் தேர்தல் போர்.. அடுத்த பிரதமராகும் ரிஷி சுனக்?

பிரிட்டன் அரசியலில் பரபரப்பு: தீவிரமாக நடக்கும் தேர்தல் போர்.. அடுத்த பிரதமராகும் ரிஷி சுனக்?

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற தகுதியைப் பெற ரிஷி சுனக் நெருங்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaBritain Britain Britain

  357 எம்.பிக்களை கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சியில் 100 எம்.பிக்கள் ஆதரவு இருந்தால் மட்டும் தான் பிரதமர் பதவிக்கான தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலையில் ரிஷி சுனக் 177 எம்.பிக்களின் ஆதரவுடன் முன்னிலையிலிருந்து வருகிறார்.

  மேலும் போரிஸ் ஜான்சன் தேர்தல் களத்தைச் சந்திக்காமல் பின் வாங்கிய நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியில் முக்கிய தலைவர் பென்னி மோர்டான்ட் 26 எம்.பிக்களின் ஆதரவுடன் தேர்தலில் களம் இறங்க முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

  கன்சர்வேட்டிவ் கட்சியின் அறிவிப்பின் படி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஆதரவுகளுடன் இன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்குள் விருப்பம் தெரிவிக்கவேண்டும். ரிஷி சுனக் தேர்தலில் பிரதமர் பதவிக்காகப் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். ஆனால் இது வரை பென்னி மோர்டான்ட் பெரிய அளவு ஆதரவு திரட்டாத நிலையில்  எதிர்ப்பு இல்லாமல் ரிஷி சுனக் பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

  கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பிக்களில் ஆதரவு ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், பென்னி மோர்டான்ட் ஆகிய மூவருக்கும் பிரிந்திருந்த நிலையில், போரிஸ் ஜான்சன் விலகியதால் அவருடைய ஆதாரவளர்கள் தற்போது சிதறியுள்ளனர்.

  Also Read : பிரிட்டன் பிரதமருமான போட்டியில் ரிஷி சுனக் முன்னிலை... பின் வாங்கிய போரிஸ் ஜான்சன் - அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

  பெரும்பாலான எம்.பிக்கள் ரிஷி சுனக் பக்கம் திரும்பி இருந்தும் இன்னும் மீதியுள்ளவர்களை எண்ணி பதற்றம் அதிகரித்து வருகிறது. பென்னி மோர்டான்ட் - இன் ஆதரவாளர்கள் தகவலின்படி, பென்னி தேர்தலிலிருந்து விலகும் எண்ணத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

  இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் பிரிட்டன் அரசியலில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இன்று மாலை 6.30 மணிக்கு முடிவுகள் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை பென்னி ஆதரவு திரட்டி தேர்தலில் களம் கண்டால், வரும் அக்டோபர் 28ம் தேதி உள்கட்சி தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்றவர் பிரதமராகப் பதவியேற்பார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Britain, Election, Prime minister, UK