ஹோம் /நியூஸ் /உலகம் /

பிரிட்டன் பிரதமரானார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்!

பிரிட்டன் பிரதமரானார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்!

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

அதனையடுத்து ஆளும் கட்சியின் புதிய பிரதமருக்கான போட்டி பரபரப்பான நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் கட்சியின் அதிக ஆதரவைப் பெற்று கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் தேர்வாகினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaLondonLondonLondonLondon

    பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வான நிலையில், இன்று அவரை பிரதமராக நியமித்தார் பிரிட்டன் மன்னர் சார்லெஸ்.

    பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், நாடு பெரும் பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டு வருகிறது. சொந்த கட்சியில் அழுத்தம் காரணத்தினால் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் நின்ற நிலையில், லிஸ் டிரஸ் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் நிலவும் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியாமல் ஆட்சிக்கு வந்து 45 நாட்களிலேயே லிஸ் டிரஸ் ஆட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.

    அதனையடுத்து ஆளும் கட்சியின் புதிய பிரதமருக்கான போட்டி பரபரப்பான நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் கட்சியின் அதிக ஆதரவைப் பெற்று கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் தேர்வாகினார்.

    இந்நிலையில் இன்று அவரை பிரிட்டன் மன்னர் சார்லெஸ் ரிஷி சுனக்-ஐ புதிய பிரதமராக நியமித்தார்.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Britain