ஹோம் /நியூஸ் /உலகம் /

ஹைதியில் வெடித்த கலவரம் - வன்முறையாளர்களைத் தடுக்க முடியாமல் உதவிக்கரம் நீட்டியுள்ள அரசு!

ஹைதியில் வெடித்த கலவரம் - வன்முறையாளர்களைத் தடுக்க முடியாமல் உதவிக்கரம் நீட்டியுள்ள அரசு!

ஹைதி

ஹைதி

ஹைதியில் தீவு நாட்டில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. வன்முறையை சமாளிக்க முடியாமல் ஹைதி அரசு திணறுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • international, IndiaHaitiHaitiHaiti

  ஹைதி தீவு நாட்டில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. வன்முறை காரர்கள் ஒரு பக்கம் புரட்சியாளர்கள் ஒரு பக்கம் என்று நாட்டில் பயங்கர கலவரம் நிலவும் நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையாளர்களைத் தடுக்க முடியாத நிலையில் தற்போது உலக நாடுகளிடம் உதவியை ஹைதி அரசு நாடியுள்ளது.

  ஹைதியில் வன்முறையாளர்களின் குழுக்கள் நாட்டின் அமைதியைக் குழைக்கும் வகையில் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராகக் கலவரத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றனர். அதில் பெரிய புள்ளியாகத் திகழும் கிளர்ச்சி குழு நாட்டில் முக்கிய எரிபொருள் நிலையத்தைக் கைப்பற்றியுள்ளது. மேலும் கலவரக்காரர்கள் அத்தியாவசிய தேவையான நீர், உணவு போன்றவற்றை ஆக்கிரமித்து வருகின்றனர்.

  இதனால் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், தொழில் பகுதிகள் மற்றும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசை எதிர்த்து போராட்டக்காரர்களும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  சாதாரண மக்கள் இதனால் பாதிக்கப்பட்டதுடன் கொடுமையான மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருகிறது. இதனிடையே அரசு எரிபொருள் கட்டுப்பாடு காரணத்தினால் கடந்த செப்டம்பர் 11ம் தேதி பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

  ஹைதி கலவரம்

  நாடு முழுவதும் பஞ்சம் தலைதூக்கிய நிலையில் போரட்டகாரர்களும் வன்முறையாளர்களும் உணவு கிடங்குகளைத் தாக்கி உணவுகளைத் திருடி வருகின்றனர். சுகாதாரம், ஆரோக்கியமான உணவு போன்றவை மக்களுக்குச் சரியாகக் கிடைக்காத நிலையில் தற்போது காலரா தொற்று பரவும் நிலை ஹைதியில் உருவாகியுள்ளது. இது வரை 8 பேர் வரை காலரா நோயினால் இறந்துள்ளனர் என்று ஹைதி அரசு தெரிவித்துள்ளது.

  ஹைதி கலவரம்

  ஹைதி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நடந்த கலவரத்தில் மட்டும் நூற்றுகணக்கில் மக்கள் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

  Also Read : ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்.. இதுவரை 185 பேர் உயிரிழப்பு

  இதனையடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் பாதுகாப்பு கவுன்சலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் ஹைதியில் நிலவும் மனித உரிமை மீறல், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ராணுவ தேவைகள் போன்றவை சந்திக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Janvi
  First published:

  Tags: Haitians, United Nation