பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ கவர்னருக்கு கொரோனா தொற்று..!

பிரேசிலில் 25,262 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ கவர்னருக்கு கொரோனா தொற்று..!
பிரேசில் கவர்னர் வில்சன் விட்ஸன்
  • Share this:
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் கவர்னர் வில்சன் விட்ஸலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள விட்ஸல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்ததாகவும், இதையடுத்து மேற்கொண்ட கொரோனா பரிசோதனையின் போது தனக்கு தொற்று இருப்பது உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது தான் நலமுடன் இருப்பதாகக் கூறியுள்ள அவர் தொடர்ந்து பணியாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரேசிலில் இதுவரை 25 ஆயிரத்து 262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 1532 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Also see...









சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading