RIHANNA REFUSE TO BOW TO CHINA BLOOD MONEY UYGHUR ACTIVIST CALLS OUT HOLLYWOOD HYPOCRISY ARU
சீனாவில் இனப்படுகொலையை எதிர்கொள்ளும் உய்குர் முஸ்லிம்களுக்காகவும் ரிஹானா குரல் கொடுக்க வேண்டும்: பெண் செயற்பாட்டாளர் கோரிக்கை!
ரிஹானா
இனப்படுகொலையை அரங்கேற்றி வரும் சீன அரசு, ஹாலிவுட்டை கட்டாயமாக பேச முடியாத நிலையில் வைத்துள்ளது. சமூக அல்லது அரசியல் பிரச்னைகள் குறித்து விரைவாக கருத்துத் தெரிவிக்கும் ஒரு துறையின் அமைதியானது மனிதகுலத்தின் மதிப்புகளுக்கு துரோகம் இழைப்பதாக அமைந்துள்ளது.
சீனாவில் இனப்படுகொலையை எதிர்கொள்ளும் உய்குர் முஸ்லிம்களுக்காகவும் ரிஹானா குரல் கொடுக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பாப் பாடகி ரிஹானாவை வலியுறுத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த உய்குர் செயற்பாட்டாளரான ருஷன் அப்பாஸ்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ரிஹானா. வட அமெரிக்காவின் பார்படாஸ் எனும் தீவைச் சேர்ந்த இவரின் கருத்து இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என இந்திய பிரபலங்கள் அவருக்கு பதிலடி கொடுத்ததும் கடந்த சில நாட்களாக ஹாட் டாபிக்காக மாறியது.
இதனிடையே அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த பெண் செயற்பாட்டாளரான ருஷன் அப்பாஸ், பாப் பாடகி ரிஹானாவுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார், அதில் சீன அரசாங்கத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் ரிஹானா குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
உய்குர் இனத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்களை முகாம்களில் சீன அரசு அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களை இனப்படுகொலை செய்து வருவதுடன் உய்குர் இன பெண்களை சீன ராணுவத்தினர் பாலியல் வன்புணர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
சீனாவில் இருக்கும் இது போன்ற உய்குர் முகாம்க ஒன்றில் பெண் செயற்பாட்டாளரான ருஷன் அப்பாஸின் சகோதரியும் அடைபட்டிருக்கிறார்.
உய்குர் இனப்படுகொலை குறித்து ஏன் நாம் பேசுவதில்லை? (Why aren’t we talking about this?) என்று அவர் கேள்வி கேட்டுள்ளார். இந்த சொற்றொடரை பயன்படுத்தி தான் விவசாயிகள் போராட்டம் குறித்து ரிஹானா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ரிஹானாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நான் ரிஹானாவை தாக்கிப் பேச விரும்பவில்லை. உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக உலக சமுதாயம் குருடாகிப்போனதற்கு ஹாலிவுட்டும் ஒரு முக்கிய காரணம்.
இனப்படுகொலையை அரங்கேற்றி வரும் சீன அரசு, ஹாலிவுட்டை கட்டாயமாக பேச முடியாத நிலையில் வைத்துள்ளது. சமூக அல்லது அரசியல் பிரச்னைகள் குறித்து விரைவாக கருத்துத் தெரிவிக்கும் ஒரு துறையின் அமைதியானது மனிதகுலத்தின் மதிப்புகளுக்கு துரோகம் இழைப்பதாக அமைந்துள்ளது.
இதற்கு எதிராக குரலை எழுப்ப வேண்டிய முக்கிய அமைப்புகளாக விளங்கும் ஐக்கிய நாடுகள் சபை, இஸ்லாமிய கூட்டமைப்பு (OIC),
தேசிய கூடைப்பந்து சங்கம் (NBA) மற்றும் பிற அமைப்புகளை வாய் திறக்காமல் செய்வதற்காக சீனா தனது பொருளாதார வழிகளை பயன்படுத்தியுள்ளது என அப்பாஸ் தெரிவித்துள்ளார். பண வழிபாடு பல பிரபலங்கள், கல்வியாளர்கள் மற்றும் பிறரை ஒரு பாசாங்குத்தனமான சிரிப்பாளராக விட்டுவிட்டது என்று அவர் கூறினார்.
இந்த முகாம்களில் என சகோதரி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு தனிநபராக, இந்த இனப்படுகொலை குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்ற விவரங்களை அறிந்துகொள்வதன் மூலம் எங்கள் முழு குடும்பமும் ஆளாகும் இன்னல் பற்றி என்னால் போதுமானதாக தெரிவிக்க முடியாது.
ரிஹானாவுக்கு என் கோரிக்கை என்பது ஒன்றே ஒன்று தான், சீனாவின் இரத்தப் பணத்திற்கு தலைவணங்க மறுத்து உங்கள் குரலையும் உங்கள் பிரபலத்தின் பொறுப்பையும் பயன்படுத்துங்கள், மனிதகுலத்தின் ஆன்மாவுக்கு எதிரான குற்றங்களில் உலகை மெளனியாக்கும் சீனாவின் முயற்சிகளை முறியடியுங்கள். பெண்களின் எதிர்காலமும், நாம் மதிக்கும் சுதந்திரங்களும் ஆபத்தில் உள்ளன என அப்பாஸ் தெரிவித்துள்ளார்.