ஹோம் /நியூஸ் /உலகம் /

விநாயகர் உருவம் பொறித்த நெக்லஸுடன் டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாப் பாடகி ரிஹானா... கொதித்தெழிந்த நெட்டிசன்ஸ்

விநாயகர் உருவம் பொறித்த நெக்லஸுடன் டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாப் பாடகி ரிஹானா... கொதித்தெழிந்த நெட்டிசன்ஸ்

பாப் பாடகி ரிஹானா

பாப் பாடகி ரிஹானா

Rihanna : இந்து கடவுளை அவமதிக்கும் செயல் என்று இந்தியர்கள் பலர் அவரது ட்வீட்டிற்கு வசைப்பாடி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அமெரிக்க பாப் பாடகி ரிஹானா விநாயகர் உருவம் பொறித்த நெக்லஸூடன் டாப்லெஸ் போட்டோ வெளியிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து ஒரே நாளில் அவர் இந்தியாவில் ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருமித்தமாக பெற்றார். எங்களது நாட்டு விவகாரங்களில் நீங்கள் தலையிட வேண்டாமென்று பிரபலங்கள் பலர் அவரது கருத்துக்கு பதிலளித்து இருந்தனர்.

  டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் ரிஹானாவின் ட்வீட்டிற்கு பிறகு சர்வதேச அளவில் பேசப்பட்டது. ரிஹானாவின் கருத்திற்கு பாஜக அரசியல் தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.

  இந்நிலையில் ரிஹானா தற்போது விநாயகர் உருவம் பொறித்த நெக்லஸூடன் டாப்லெஸ் புகைப்படம் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இது இந்து கடவுளை அவமதிக்கும் செயல் என்று இந்தியர்கள் பலர் அவரது ட்வீட்டிற்கு வசைப்பாடி வருகின்றனர்.

  மஹாராஷ்ராவை சேர்ந்த நான் இஸ்லாமியார் தான். ஆனால் விநாயகரை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த புகைப்படம் எனது உணர்வுகளை மிகவும் காயப்படுத்துகிறது. இதனை ரிஹானா கண்டிப்பாக திரும்ப பெற வேண்டும் என்று ரிஹானாவின் கருத்துக்கு ஒருவர் பதிலளித்துளார்.

  இந்து கடவுள்களை அவமதிக்கும் இதுப்போன்ற செயல்களை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். உங்களுக்கு அசிங்கமாக இல்லையா என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மேலும் பலர் தங்கள் கடுமையாக விமர்சித்து வருவதால் ட்வீட்டரில் ரிஹானாவுக்கு எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Rihanna