பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பதுக்குகின்றன: தென் ஆப்பிரிக்க அதிபர் பரபரப்புக் குற்றச்சாட்டு

தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா.

கொரோனா என்ற தீமைக்கு எதிரான போரில் பயனடைவது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சில நாடுகள் இதில் முன்னுரிமை பெறுவது நல்லதல்ல.

 • Share this:
  தேவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார கூட்டமைப்பு மெய்நிகர் மாநாட்டில் பேசிய தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா, பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பதுக்கி வைத்துக் கொண்டு ஏழை நாடுகளுக்கு துரோகம் செய்கின்றன என்று பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

  “பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நாடுகள், தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெரிய அளவில் தடுப்பூசிகளை வாங்கி பதுக்கி வைக்கின்றனர். சில பணக்கார நாடுகள் அவர்கள் மக்கள் தொகையை விடவும் 4 மடங்கு அதிகமாக வாங்கி பதுக்குகின்றனர்.

  4 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு 12 கோடி டோஸ்கள், அல்லது 16 கோடி டோஸ்கள் தடுப்பூசிகளை வாங்கி பதுக்குகின்றனர். எனவே கூடுதலாக பதுக்கி வைத்துள்ள தடுப்பூசிகளை வெளியே விடுங்கள்.

  சில நாடுகள் தங்கள் மக்களுக்காக பதுக்குகின்றனர், நாங்கள் எங்கு செல்வது, எங்கள் நாட்டு மக்கள் மனிதர்களில்லையா, எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

  உலகின் பணக்கார நாடுகள் எப்படி முண்டியடித்துக் கொண்டு கொரோனா தடுப்பூசியை வாங்கிப் பதுக்குகின்றனர் என்பதை நாங்கள் அறிவோம். அதனால்தான் ஆப்பிரிக்காவில் தடுப்பூசி அணுக்க பணிக்குழுவை நியமித்துள்ளோம். இதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ளோம்.

  ஆனால் வாங்கிப் பதுக்கியவர்கள் ரிலீஸ் செய்ய வேண்டும். அப்போதுதான் பிற ஏழை நாடுகள் பயனடைய முடியும்.

  கொரோனா என்ற தீமைக்கு எதிரான போரில் பயனடைவது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சில நாடுகள் இதில் முன்னுரிமை பெறுவது நல்லதல்ல” என்று சாடினார் தென் ஆப்பிரிக்க அதிபர்.
  Published by:Muthukumar
  First published: