HOME»NEWS»INTERNATIONAL»revenge is inevitable said ayatollah ali khamenei against trump srs

ட்ரம்ப் மீது ட்ரோன் தாக்குதல்? வெளிப்படையாக மிரட்டல் விடுத்த ஈரான்

``ட்ரம்ப் கூட நீதியில் இருந்து தப்பிக்க முடியாது. சுலைமானியின் கொலைக்கு காரணமானவர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்”

ட்ரம்ப் மீது ட்ரோன் தாக்குதல்? வெளிப்படையாக மிரட்டல் விடுத்த ஈரான்
இரான் தலைவர் வெளியிட்டுள்ள புகைப்படம்
  • Share this:

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதலே ஈரான் மற்றும் அமெரிக்க இடையே பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகிறது. ஈரான் ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கடந்த ஆண்டு கொலை செய்தது. இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

இதனால், இருநாடுகளுக்கும் இடையே அசாதாரணமான சூழ்நிலை நிலவி வந்தது. அமெரிக்க தேர்தலில் தோல்வியடைந்து ட்ரம்ப் வாஷிங்டனை விட்டு வெளியேறி இருக்கும் இந்த சூழ்நிலையில் ஈரான் தலைவர் வெளியிட்டிருக்கும் ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ட்ரோன் விமானத்தின் நிழலில் ஒருவர் கோல்ஃப் விளையாடுவதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது. கேப்ஷனில், ``பழிவாங்குதல் என்பது தவிர்க்க முடியாதது. சுலைமானியை கொலை செய்த கொலையாளியும் அதற்கு உத்தரவு வழங்கி நபரும் நிச்சயம் எதிர்வினைகளை சந்திக்க வேண்டும். எந்த நேரத்திலும் பழிவாங்குதல் நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால், புகைப்படத்தில் இருப்பவர் ட்ரம்ப் எனவும் அவரை பழிவாங்க ஈரான் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.





இந்த மாத தொடக்கத்தில் ராணுவப்படைத்தளபதி சுலைமானியின் முதல் நினைவு ஆண்டு அனுசரிக்கப்பட்டது. இந்நாளில் அந்நாட்டின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி, ``ட்ரம்ப் கூட நீதியில் இருந்து தப்பிக்க முடியாது. சுலைமானியின் கொலைக்கு காரணமானவர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார். இத்தகைய சூழலால் தற்போது அமெரிக்கா மற்றும் இரான் இடையே பரபரப்பு மீண்டும் நிலவத்தொடங்கியுள்ளது.
Published by:Ram Sankar
First published: