தாலிபான்களின் கொட்டத்தை அடக்கிய எதிர்ப்புப் படைகள் - 3 மாவட்டங்கள் மீண்டும் மீட்பு!

எதிர்ப்புப் படையினர்

பொதும்மக்கள் எழுச்சியாக அவர்களே தாலிபான்களை எதிர்த்து போராடத்தொடங்கியுள்ளனர்.

  • Share this:
தாலிபான்கள் வசமிருந்து 3 மாவட்டங்களை மீண்டும் கைப்பற்றி அவர்களின் கொட்டத்தை அடக்கியிருக்கிறது எதிர்ப்புப் படைகள்.

அமெரிக்கப் படைகள் வெளியேற்றத்துக்கு பின் ஆப்கானிஸ்தானின் நிலைமை தலைகீழ் ஆக மாறிவிட்டது. பத்தே நாட்களில் ஒவ்வொரு நகராக கைப்பற்றி இறுதியாக கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 15) தலைநகர் காபுலையும் கைப்பற்றினார்கள் தாலிபான் அமைப்பினர். அசுர வேகத்தில் முன்னேறி வந்த தாலிபான்களுடன் பெரும்பாலும் அரசுப் படைகள் மோதவே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

அமெரிக்கா அளித்த அதிநவீன ஆயுதங்கள் அரசுப் படைகளிடமிருந்தும் அவர்கள் தாலிபானை எதிர்காதது ஆச்சரியமாகவும் ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி ஒரு சில அரசு அதிகாரிகளுடன் நாட்டைவிட்டே தப்பியோடினார். நாங்கள் முன்பு போல இல்லை, இனி நாங்கள் வேறு மாதிரி இருப்போம் என ஒரு சில நாட்கள் காட்டிக்கொண்ட தாலிபான்கள், தற்போது மெல்ல மெல்ல பழைய நிலைக்கு மக்களை இழுத்துச் செலவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read: தாலிபான்களுக்கு ஆதரவு: அஷ்ரப் கனிக்கு அதிர்ச்சி தந்த அவரது சகோதரர்!

இந்நிலையில், அரசுப் படைகளையே கவிழ்த்துவிட்ட தாலிபான்களுக்கு எதிர்ப்பே இல்லை என்ற நிலையை மாற்றிக்காட்டியிருக்கிறது ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் என்ற ஒரே ஒரு மாகாணம். மொத்தம் இருக்கும் 34 மாகாணங்களில் இந்த ஒரு மாகாணம் மட்டுமே தாலிபான்களை வீழ்த்தி அவர்களின் கொட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தது.இந்நிலையில் மேலும் 3 மாவட்டங்கள் தாலிபான்கள் வசமிடமிருந்து மீண்டும் பொதுமக்களின் கைக்கு சென்றுள்ளன. பொதும்மக்கள் எழுச்சியாக அவர்களே தாலிபான்களை எதிர்த்து போராடத்தொடங்கியுள்ளனர். எதிர்ப்புப் படைகள் என அழைக்கப்படும் இவர்கள் தாலிபான்களுடன் போராடி, துப்பாக்கிச்சூடு நடத்தி பக்லான் மாகாணத்தின் பானு, பொல் இ ஹெசார் மற்றும் தேஹ் சலா ஆகிய 3 மாவட்டங்களை மீட்டுள்ளனர்.

Also Read:  ஓலா S1 pro Vs ஏதெர் 450X: எது சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? – ஒரு முழுமையான ஒப்பீடு..

மேலும் சில மாவட்டங்கள் நோக்கி இவர்கள் முன்னேறி வருகின்றனர். இந்த 3 மாவட்டங்களுமே பஞ்ச்ஷிர் மாகாணத்தை ஒட்டிய பகுதிகளாகும். புவியமைப்பு வகையில் இந்துகுஷ் மலைத்தொடரில் இந்த பகுதி அமைந்திருப்பதால் தாலிபான்களால் உள்ளூர் குழுக்கலான பஞ்ச்ஷிர்களை எதிர்த்து போராட முடியவில்லை என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபர் என சவால்விட்டுள்ள துணை அதிபர் அம்ருல்லா சலேவும் பஞ்ச்ஷிர்காரர் தான் என்பது குறிப்பிடத்தக்கது..
Published by:Arun
First published: