முகப்பு /செய்தி /உலகம் / உருகும் பனிப்பாறைகளும், 75% குறைந்திருக்கும் பெங்குயின்களும் : எச்சரிக்கிறது அண்டார்டிகா

உருகும் பனிப்பாறைகளும், 75% குறைந்திருக்கும் பெங்குயின்களும் : எச்சரிக்கிறது அண்டார்டிகா

சின்ஸ்ட்ராப் வகை பெங்குயின்கள்

சின்ஸ்ட்ராப் வகை பெங்குயின்கள்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அண்டார்டிகாவில் கடந்த ஐம்பது வருடங்களில், பெங்குயின்களை எண்ணிக்கை 75%-க்கும் மேலாக குறைந்திருப்பதாக காலநிலை குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.

சின்ஸ்ட்ராப் பெங்குயின்களின் எண்ணிக்கை கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 75%-க்கும் மேலாக குறைந்திருப்பதாக காலநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்டார்க்டிக் தீபகற்பத்தின் வடகிழக்குப் பகுதியும், முக்கியமான பெங்குயின் வாழ்விடமுமான எலெஃபண்ட் தீவில், அதிர்ச்சி தரும் அளவில் பெங்குயின்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அப்பகுதிக்கு பசுமைப் பயணம் மேற்கொண்ட சுயாதீன ஆய்வாளர்களின் குழு தெரிவித்துள்ளது.

சின்ஸ்ட்ராப் வகை பெங்குயின் கூட்டம்

உலகின் 70% நன்னீர் அண்டார்க்டிகா கண்டத்தில் உள்ளது. புவி வெப்பமயமாதலால் இங்குள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இம்மாதம் 7-ஆம் தேதி 65 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியது. அண்டார்க்டிகா வரலாற்றிலேயே இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவானது இதுவே முதல்முறை என்றும், எதிர்வரும் காலங்களில் வெப்பநிலையின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Also See...

First published:

Tags: Antarctica