Home /News /international /

விமான நிலையங்கள் மூலம் 1 லட்சம் வீடுகளுக்கு தேவையான சூரிய சக்தியை உற்பத்தி செய்யலாம் : ஆய்வில் கண்டுபிடிப்பு

விமான நிலையங்கள் மூலம் 1 லட்சம் வீடுகளுக்கு தேவையான சூரிய சக்தியை உற்பத்தி செய்யலாம் : ஆய்வில் கண்டுபிடிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஆஸ்திரேலியாவின் அரசுக்கு சொந்தமான விமான நிலையங்கள் பெரிய அளவிலான சூரிய நிறுவல்களுக்கு சிறந்த ஹோஸ்ட்களாக இருக்க முடியும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக விமான நிலையங்கள் பெரிய பரப்பளவில் அமைக்கப்படுகின்றன. மேலும் அங்கு கட்டப்படும் வளாக கட்டிடங்களும் மிகப்பெரியது. இந்த நிலையில் ஒரு புதிய ஆராய்ச்சி, விமான நிலைய கட்டிடங்களின் மேற்கூரைகளை சூரிய சக்தியினை உற்பத்தி செய்ய பயன்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளது. ஆய்வின்படி, ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான விமான நிலையங்கள் பெரிய அளவிலான சூரிய மின்சக்தி நிறுவல்களுக்கு சிறந்த ஹோஸ்ட்களாக இருக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளது.

அங்குள்ள விமான நிலைய கட்டிடங்களின் கூரைகளில் சோலார் பேனல்கள் வைக்கப்பட்டால், அவை சுமார் 1,36,000 வீடுகளுக்கு போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடும் என்று ஆய்வின் மூலம் கணிக்கப்பட்டுள்ளது. இது நிகர-பூஜ்ஜிய உமிழ்வை நோக்கிய ஆக்கபூர்வமான முயற்சியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மெல்போர்னில் உள்ள ஆர்.எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆஸ்திரேலிய நகரத்தில் குடியிருப்பு சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அந்த நாட்டில் 21 விமான நிலையங்களின் பசுமை ஆற்றல் உற்பத்தியுடன் ஒப்பிட்டுள்ளனர்.

AlsoRead:கொரோனா 2வது அலைக்கு 5G நெட்வொர்க் காரணமா?

இதுகுறித்து தி ஜர்னல் ஆஃப் பில்டிங் இன்ஜினியரிங்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஆராய்ச்சியாளர்கள் தெற்கு ஆஸ்திரேலியாவின் பெண்டிகோ நகரில் உள்ள 17,000 குடியிருப்பு சோலார் பேனல்களின் செயற்கைக்கோள் படங்களை ஸ்கேன் செய்தனர். மேலும் விமான நிலையங்கள் பெரிய அளவிலான சோலார் பேனல்களால் மூடப்பட்டிருந்தால், குடியிருப்பு பகுதி உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட, அவற்றால் 10 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கணக்கிட்டனர். 17,000 குடியிருப்பு பேனல்கள், கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை ஆண்டுக்கு 151.6 கிலோட்டன்களால் குறைக்கும். இது சாலைகளில் செல்லும் 71, 000 பயணிகள் கார்களை குறைப்பதற்கு சமம்.

அதிலும், பெர்த் விமான நிலையம் மட்டும் பெண்டிகோ பகுதியை விட இரண்டு மடங்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் அப்பகுதி மிகவும் வெயிலானது மற்றும் விமான நிலையம் பெரிய கட்டிடங்களைக் கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து ஆற்றலைப் பெறுவதில் அரசாங்கமும் ஆராய்ச்சியாளர்களும் கவனம் செலுத்தினால் அது எவ்வளவு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த பகுப்பாய்வு எடுத்துக்காட்டியுள்ளது.

AlsoRead:செல்ல நாய்க்குட்டிக்கு பிரியாவிடை.. வருத்தத்தில் ஒபாமா

அதேபோல அந்நாட்டில் உள்ள திறந்த கூரை இடத்திற்காக விமான நிலையங்களின் செயற்கைக்கோள் படங்களையும் ஆராய்ச்சியாளர்கள் ஸ்கேன் செய்தனர். அங்கு சோலார் பேனல்கள் நிழல்களைத் தரும் கூரைகளாக பயன்படுத்தப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த மாதிரியான இடங்கள் மொத்தம் 2.61 சதுர கிலோமீட்டர் அல்லது ஒரு சதுர மைல் அளவில் இருந்ததாக கண்டறிந்தனர்.

முந்தைய ஆய்வுகள் விமான நிலையங்களை சிறந்த சூரிய ஜெனரேட்டர்களாகக் கருதினாலும், ஆர்.எம்.ஐ.டி ஆராய்ச்சி பெரிய அளவிலான அமைப்புகளின் பயன்பாட்டை துல்லியமான மாதிரியாக்குவதன் மூலம் அதிக பயனை பெறலாம் என்பதை விளக்கியுள்ளது. ஆர்.எம்.ஐ.டி யின் ஸ்கூல் ஆஃப் சயின்ஸில் உள்ள புவியியல் விஞ்ஞானி செயின் சன் என்பவர் இது குறித்து தெரிவிக்கையில், "இந்த ஆய்வின் முடிவுகள் எரிசக்தி கொள்கைக்கு வழிகாட்டும் என்றும் எதிர்கால ஆராய்ச்சிகள் பெரிய கட்டிடங்களில் சூரிய பேனல்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தும்" என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Australian, Flight

அடுத்த செய்தி