தேனி எம்.பி துரித நடவடிக்கை... இந்திய - நேபாளம் எல்லையில் சிக்கித்தவித்த 36 தமிழர்கள் மீட்பு!

”வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்திருந்தார்”

தேனி எம்.பி துரித நடவடிக்கை... இந்திய - நேபாளம் எல்லையில் சிக்கித்தவித்த 36 தமிழர்கள் மீட்பு!
”வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்திருந்தார்”
  • Share this:
இந்திய-நேபாளம் எல்லையில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த 36 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த 23 பெண்கள் உள்பட 33 பேர் வடமாநிலங்களில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் கடந்த 22ஆம் தேதி மக்கள் அனைவரும் ஊரடங்கில் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் இந்தியா-நேபாளம் எல்லையோரமான உத்தரபிரதேச மாநிலம் Sunauli என்ற இடத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இந்த ஊரடங்கை மீறி அவர்களால் வர முடியாமல் அங்கேயே முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை மீட்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்தார்.


இதைத் தொடர்ந்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தொடர்புக் கொண்டு அங்கு சிக்கிக்கொண்ட 36 தமிழர்களை மத்திய அரசு மீட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading