ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் அங்கு நிலவும் நிச்சயமற்ற சூழல் காரணமாக அடுத்தடுத்த நகர்வுகள் பரபரப்பு மிகுந்ததாக அமைந்திருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இன்னும் முழுவதும் அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பாத நிலையில் தாலிபான்களின் கை ஓங்கி இருப்பதால் மீட்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சி17 விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து சிக்கியவர்கள் இரு முறை மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். மேலும் பல இந்தியர்கள் காபுலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் மீட்கப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.
Also Read:
தாலிபான்களின் கொட்டத்தை அடக்கிய எதிர்ப்புப் படைகள் – 3 மாவட்டங்கள் மீண்டும் மீட்பு!
இந்நிலையில் காபுல் விமான நிலையம் அருகே இன்று காலை 150க்கும் மேற்பட்டோரை தாலிபான்கள் கடத்திவிட்டதாக கூறப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என தகவல் பரவியது.
இந்நிலையில் இந்தியர்களை நாங்கள் கடத்தவில்லை என தாலிபான்கள் மறுப்பு தெரிவித்திருப்பதாக காபுலில் இருக்கும் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் ஷரிஃப் ஹசன் தெரிவித்திருந்தார். அதே போல இந்தியர்களை தாலிபான்கள் கடத்தியதாக வெளியான செய்தியையும் மத்திய அரசு வட்டாரங்கல் மறுத்திருக்கின்றன.
Also Read: தாலிபான்களுக்கு ஆதரவு: அஷ்ரப் கனிக்கு அதிர்ச்சி தந்த அவரது சகோதரர்!
தாலிபான் விளக்கம்:
காபுல் விமான நிலையத்திற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள் யாரும் கடத்தப்படவில்லை என இந்தியர்களை கடத்தியதாக வெளியான தகவல் குறித்து தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இன்னும் சுமார் 1000 இந்தியர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது. இதில் காபுலில் உள்ள குருத்வாரா ஒன்றில் சீக்கியர்கள், இந்துக்கள் என 200 பேர் மீட்கப்படுவதற்காக காத்திருப்பவர்களும் அடங்குவர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.