இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், பெரும்பாலும் வீடுகளை குத்தகை அல்லது வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளில் கொரோனா அச்சுறுத்தலால் பலரும் சொந்த ஊர் திரும்பியதால், பல வீடுகள் காலியாகின. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், மீண்டும் லண்டனுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனால் வாடகை வீடுகளுக்கான மவுசும் கூடியுள்ளது. அதன் தாக்கமாக வாடகையை உயர்த்துவதில் வீட்டு உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், லண்டனில் ஒரு மாத சராசரி வீட்டு வாடகை இந்திய மதிப்பில் 2 ,50,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு சிலர் வீட்டு உரிமையாளர்கள் மாதம் 3 லட்சம் ரூபாய் வரை வாடகை வசூலிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் 9.7 சதவீதம் வாடகை உயர்ந்துள்ளது. லண்டனில் உயர்ந்தப்பட்ட மின்சார கட்டணத்துடன், வாழ்க்கைச் செலவினங்களை பூர்த்தி செய்ய முடியாமல் பலர் திண்டாடி வரும் நிலையில், வாடகை உயர்வு கூடுதல் சுமையாகி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: London, Rent, Rental Agreement, Rented house